பொது எதிர்க்கட்சியின் தேவைக்காக மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க முடியாது என  தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அவரது பதவிக்காலம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.