வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியை சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி(வயது 25) என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூரடியில் உள்ள தனது வீட்டில் குறித்த யுவதி நேற்று மாலை கிணற்றில் நீர் அள்ளியுள்ளார். இதன்போது காப்பியின் கயிறு காலில் சிக்குண்டத்தில் தண்ணீர் வாழியுடன் இழுபட்டதஜல் யுவதி கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
யுவதியின் அவலக் குரலை கேட்ட அயலவர்கள் கிணற்றுக்குள் இருந்து யுவதியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் யுவதி ஏற்கனவே இறந்து விட்ட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM