முழு உலகையும் அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்  இலங்கையிலும் அதன் அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்ற சூழலில் மக்கள் மிகவும் விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய  அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.  மிக முக்கியமாக  பொதுமக்கள்  தாமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருக்கின்றனர் என்பதை  மறந்துவிடக் கூடாது.

மிக முக்கியமாக உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கையின் சுகாதார அமைச்சும் நாம் எவ்வாறு  பாதுகாப்பாக  இருக்க வேண்டும்  என்பதுடன் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண் டும் என்பது தொடர்பாக பல்வேறு  அறிவு றுத்தல்களையும் விளக்கங்களையும் வழங்கியுள்ளனர். அந்தச் சுகாதார  துறைசார்ந்த அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றினால்  இந்தக்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாம்   மீண்டுவிட முடியும். 

குறிப்பாக  கை கழுவுதல்   மிக  முக்கியத்துவமிக்க ஒரு விடயமாக   வலியுறுத்தப்பட்டு வருகின்றது.  சரியான முறையில் கை கழுவினால்  கொரோனா வைரஸை கைகழுவி விடலாம் என்பது   தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.   இதன் தாக்கம்  தற்போது  இலங்கையை  ஆக்கிரமித்திருக்கின்றது என்றே கூற வேண்டும். இதனால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. 

இந்த இரண்டு வாரங்களே  கொரோனா வைரஸ் தொடர்பாக இலங்கையின் திருப்புமுனை காலமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு வாரங்களில் நாம் சரியான முறையில்  இந்தத் தொற்றை பரவவிடாமல் பாதுகாப்பதன் மூலமே   நாம்  வெற்றியை நோக்கி நகர முடியும்.  கொரோனா வைரஸ்  பரவல்  கட்டுப்படுத்தப்படுகின்றதா? அல்லது மேலும்   பரவிவிடுமா  என்பதை   இந்த இரண்டு வாரங்களே தீர்மானிக்கப் போகின்றன. எனவே மிகவும் பொறுப்புடனும் விழிப்புடனும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும்  மக்கள் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. 

தற்போதைய நிலைமையில்  28 பேர்  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புற்றவர்களாக  அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள்  ஐ.டி.எச். மருத்துவமனையில்  தற்போது   தனிமைப்படுத்தப்பட்டு   மருத்துவ சிகிச்சைக்கு  உட்படுத்தப் பட்டிருக்கின்றனர்.  அதுமட்டுமன்றி  கொரோனா வைரஸ்  ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் 204 பேர்   17 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவதான சிகிச்சைக்கு   உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வரை  இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட மட்டத்திலேயே இருந்தது.  எனினும்   தற்போது திடீரென  அதன் தாக்கம்   அதிகரித்திருக்கிறது. 


குறிப்பாக  இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்  சிலரின் ஊடாகவே இந்தத்   தொற்று தற்போது இலங்கையில்  பரவி வருவதாகத் தெரியவருகிறது. எனவே தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. எனவே இந்தச் சூழலில் பதற்றமடையாமல் சரியான தற்பாதுகாப்பு  நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமாகின்றது.   சரியான முறையில் சுகாதார அறிவு றுத்தல்களைப்  பின்பற்றுவது அவசியமாகின்றது.   இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுகிறது,  அதிலிருந்து நாம்  எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு   என்ன செய்ய வேண்டும்? இந்தத்  தொற்று  மனித உடலை  எவ்வாறு அச்சுறுத்துகின்றது என்பது தொடர்பாக     பலவழிகளில் கூறப்பட்டு வருகின்றது. 

எனவே அந்த வழிகளை அடையாளம் கண்டு எம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகின்றது.  கைகளை   அடிக்கடி கழுவுவது தொடர்பாக  உலக அளவில்  வலியுறுத்தப்படுகிறது. அதனைப் பின்பற் றுவது அவசியமாகின்றது.  அடிக்கடி  20 விநாடிகள்   கைகளுக்கு சவர்க்காரமிட்டு கழுவுவது அவசியமாகின்றது.  

அத்துடன் கைகளால்  கண்கள், மூக்கு, வாய் என்பவற்றைத்  தொடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  அதுமட்டுமன்றி இருவர் உரையாடும்போது தேவையான இடைவெளியைப் பேணுவதுடன் ஒருவர் இருமும்போது முழங்கையால்  மறைத்து அல்லது  துணியால் மறைத்து இரும வேண்டும் என்பதும்  வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

 எனவே  இது தொடர்பாக விழிப்புடனும் பொறுப்புடனும் கவனம் எடுத்தும் செயற்படுவது அவசியமாகும்.   

இந்த நிலையில் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பில் நாம்  வடக்கு மாகாண  சமுதாய வைத்திய நிபுணர்  டாக்டர் கேசவனுடன்  பல்வேறு விடயங்கள் தொடர்பாக  கலந்துரையாடினோம்.   இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில்   டாக்டர் கேசவன் பகிர்ந்துகொண்ட  விடயங்கள் வருமாறு:

இந்நிலையில்    அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள்  இந்த விடயத்தில் எடுக்கப்பட்டுள்ளன.   அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கி   இந்த அபாயத்திலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.    மிக விசேடமாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும். 

அதனூடாகவே இந்த வைரஸ் தாக்கத்தை  இல்லாதொழிக்க முடியும்.   முக்கியமாக எம்மையும் பாதுகாத்து எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்.   இந்த வைரஸ் தாக்கத்தால்  சுவாசத் தொகுதி பாதிக்கப்பட்டு நியுமோனியா  காய்ச்சல் ஏற்படுகின்றது. அதனூடாகவே   மரணம் சம்பவிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. இதனால்தான் வயது முதிர்ந்தவர்கள்   அல்லது ஏதாவது  ஒரு நோய்  ஏற்கனவே உள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

எதிர்வரும்  இரண்டு வாரங்களுக்கு ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்வது  சிறந்த ஒரு  தீர்மானமாக அமையும். ஒன்றுகூடல்களின் ஊடாக இந்தத் தொற்று பரவுவதற்கான  சாத்தியம் அதிகமாகவே இருக்கின்றது. எனவே  ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது இன்றியமையாதது. அரசாங்கம் தற்போது இரண்டு வாரங்களுக்கு   விமானப் பயணங்களை ரத்து செய்திருக்கின்றது.   இதுவும்  இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான ஒரு தீர்மானமாக அமைகின்றது. 

எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில்   சரியான சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து இந்த வைரஸை இல்லாதொழிக்க்  மக்கள் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.   வீணாக பதற்றமடையாமல்   சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது  மிக அவசியமாகும்.  கேள்வி: இந்த நோய் யாரை அதி­க­ளவில் தாக்­கு­கின்­றது?
பதில்: கொரோனா வைரஸ் எல்­லோ­ரையும் தாக்கும். ஆனால்  70 வயதைத் தாண்­டி­ய­வர்கள், ஏதா­வது ஒரு சுக­வீ­னத்தைக் கொண்­ட­வர்கள் சற்றுக் கவ­ன­மா­கவும் விழிப்­பா­கவும் இருக்­க­ வேண்டும். முக்­கி­ய­மாக   இரு­த­ய நோய், ஆஸ்­துமா பிரச்­சினை, நீரி­ழி­வு நோய், சுவா­சப்­ பி­ரச்­சினை உள்­ள­வர்கள் மிகவும் கவ­ன­மாக இருக்­க­ வேண்டும்.  அவ்­வா­றான  நோய்கள் உள்­ள­வர்­களை இந்த வைரஸ்  கடு­மை­யாகத் தாக்கும். அதனால்   கவ­ன­மாக  சுகா­தார அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்­றி­யி­ருக்­க­ வேண்டும். 

கேள்வி: நோய் எதிர்ப்பு சக்தியின் வகி­பாகம் எவ்­வாறு உள்­ளது?
பதில்: நோய் எ­திர்ப்பு சக்தி இருந்தால் இந்த நோய் தாக்­கு­வதை குறைக்­கலாம் என்­பது பொது­வா­னது. அது உண்­மை­யாகும்.   சரி­யான போஷாக்­குடன்  மக்­க­ளுக்கு  நோய் எ­திர்ப்பு  சக்தி இருக்­கு­மாயின் இந்த வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து எம்மைப் பாது­காக்­கலாம். அவ­ரவர் வய­துக்கு ஏற்­ற­வ­கையில் போஷாக்கு உண­வு­களை உட்­கொண்டு நோய் எ­திர்ப்பு சக்­தியை அதி­க­ரித்­துக்­கொள்­வது சிறந்­த­தாகும்.  சரி­யான முறையில்  உடற்­ப­யிற்சி செய்­ய­ வேண்டும். இது நோய் எ­திர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்கும். 

கேள்வி: எவ்­வாறு மக்கள் தம்மைப் பாது­காத்­துக் ­கொள்­வது?
பதில்:  முக்­கி­ய­மாக கைக­ழு­வு­தலே பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றது. கைகளை சவர்க்­கா­ர­மிட்டு நன்­றாகக்  கழு­வ­ வேண்டும்.   அத்­துடன்  நேர­டி­யாக உரை­யா­டும்­போது   மூன்று அல்­லது நான்கு அடி இடை­வெ­ளியைப் பேண­ வேண்டும். பொது ­நி­கழ்­வு­களை,  விழாக்­களை,  ஒன்­று­கூ­டல்­களைத் தவிர்ப்­பது  மிக அவ­சி­ய­மாகும்.   இரு­மும்­போது  முழங்கை மற்றும் துணியால் மூக்கை மறைப்­பது அவ­சி­ய­மாகும்.  அதன்­பின்னர் அந்தத் துணியை தகு­தி­யான இடத்தில் போட்டு  அகற்­றி­வி­ட­ வேண்டும்.    எக்­கா­ரணம் கொண்டும் மற்­ற­வர்­க­ளுடன் கைகுலுக்­க­ வேண்டாம். கைகூப்பி வணக்கம் சொல்­லுங்கள். அவ­சி­ய­மில்­லா­விடின் எக்­கா­ர­ணத்­தைக் ­கொண்டும்  வீட்டை விட்டு வெளியே போக­ வேண்டாம். தற்­போ­தைய நிலை­மையில் வீட்­டுக்குள் இருப்­பதே   தகு­தி­யான ஒரு விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

கேள்வி: அடுத்­து­வரும் இரண்டு வாரங்கள்  முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக ஏன் கூறப்­ப­டு­கின்­றது?
பதில்: தற்­போது இந்­த­ வைரஸ் எமது நாட்­டுக்குள்  வந்து விட்­டது. எனவே  நாம் அதி­லி­ருந்து உட­ன­டி­யாக  மீள வேண்டும்.  தற்­போது  இந்த வைரஸ் நாட்­டுக்குள் பர­வி­யுள்­ளதால்   அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு நாம்  கவ­ன­மாக இருக்­க­ வேண்டும்.   இந்த இரண்டு வாரங்­களில் நாம் செயற்­ப­டு­கின்ற விதமே  இலங்­கையின்  பாதிப்பு நிலை­மையைத்  தீர்­மா­னிக்­கப் ­போ­கின்­றது. எனவே மிகவும் பொறுப்­பு­டனும் விழிப்­பு­டனும் செயற்­ப­ட­ வேண்டும்.   அநா­வ­சி­ய­மாக பயப்­ப­ட­ வேண்டாம். ஆனால் விழிப்­பு­ணர்­வுடன் இருக்­க ­வேண்டும். 

கேள்வி:தனி­மைப்­ப­டுத்தல் அவ­தா­னிப்பு குறித்து... 
பதில்:தற்­போது  குறிப்­பிட்ட சில நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்­ற­வர்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு அவ­தா­னிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். மேலும்    வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து  கடந்த நாட்­களில் இலங்­கைக்கு  வருகை தந்­த­வர்கள் தம்மை வீடு­களில் சுய ­த­னி­மைப்­ப­டுத்­த ­லுக்கு உட்­ப­டுத்­துங்கள், இதன்­போது   வீட்­டி­லி­ருக்­கின்ற ஏனை­யவர்கள்  கவ­ன­மாக இருக்­க­ வேண்டும்.   தனி­மைப்­ப­டுத்­தலில் இருந்து யாரும் விலகியிருக்க வேண்டாம்.  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டைப் பாது காப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து வந்த  மக்களின் ஒத்துழைப்பு  மிகவும்   அவசிய மாகும். இவ்வாறு   டாக்டர் கேசவன்  பல்வேறு விளக்கங்களை அளித்தார். 

டாக்டர் கேசவன் 
எபோலா வைரஸ் உலகைத் தாக்கியபோது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்திய நிபுணராகப் பணியாற்றியிருந்தவர்.  


- ரொபட் அன்டனி =