கொரோனாவை தடுக்கும் முகமாக தாய்வான் அரசு, சர்வதேசத்தின் பெரும்லான நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை தனது நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது நாட்டின் குடியுரிமை பெற்ற அல்லது வணிக நற்சான்றிதழ்கள் பெற்றவர்கள் மாத்திரம் தாய்வானுக்குள்  நுழைய முடியுமே தவிர, வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தாய்வானுக்கு வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டு தொற்றுநோய் மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.

ஆகவே குறித்த செயற்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Image : CNN