கொவிட்–  19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான நிலைமையினைக் கருத்திற் கொண்டு பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக  இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கையை இலகுபடுத்தியுள்ளது.

நாட்டு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையினைக் கருத்திற் கொண்டே இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்தத் தீர் மானத்தை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொள்கை வீதத்தை மத்திய வங்கி 25 புள்ளிகளால் 6.25 வீதம் மற்றும் 7.25 வீதம் வரை குறைத்துள்ளதாகவும் நேற்று (17 ஆம் திகதி) முதல் இந்த நாணயக் கொள்கையை அமுலாகும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக வும் குறிப்பிடப்பட்டுள்ளது.