எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் எங்கள் கட்­சி­யிலும் கூட்­ட­ணி­யிலும் இடம்­பெறும் கலந்­து­ரை­யா­டல்கள், சந்­திப்­பு­களில், கடந்த பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ராக இருந்­தவன் என்ற வகையில் நானும் கலந்து கொள்­கிறேன். என்­னோடு கலந்­து­ரை­யா­டாமல் எந்த முடி­வு­க­ளையும் தலை­மைகள் எடுக்­க­வில்லை.

அவர்­களே அத்­த­கைய முடிவை அறி­விக்க வேண்டும் என்ற பொது உடன்­பாட்டை நாங்கள் எட்டி இருக்­கிறோம். அந்த கூட்டுப் பொறுப்பை நிறை­வேற்றும் வகையில் இப்­போ­தைய தீர்­மான முடிவுகள் எத­னையும் என்னால் அறி­விக்க முடி­யாது என தொழி­லாளர் தேசிய முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.தில­கராஜ் தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பாளர் பட்­டியல் தெரிவில் நுவ­ரெ­லியா மாவட்ட பட்­டியல் இறுதி செய்­யப்­ப­டாத நிலையில் எழுந்­தி­ருக்கும் சர்ச்­சை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் அவர் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கை­யி­லேயே அவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது,

கட்­சி­யிலும், கூட்­ட­ணி­யிலும் எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் என்­னிடம் கலந்­து­ரை­யா­டாமல் எடுக்­கப்­ப­ட­வில்லை. எங்­க­ளது சந்­திப்­பு­க­ளின்­போது தமிழ் முற்­போக்கு கூட்­டணி எந்­த­வ­கை­யிலும் பிள­வு­றா­த­வ­கையில் அதே­நேரம் தலை­வர்கள் இல­கு­வாக தீர்­மானம் எடுக்­கத்­தக்­க­தாக வழி­விட்டு,கட்சி,கூட்­டணி தலை­மை­க­ளுக்கு இரண்டு உறுதி மொழி­களை நான் வழங்­கி­யுள்ளேன்.

ஒன்று,கட்சி,கூட்­டணி உயர்­பீடம் எடுக்கும் எந்த தீர்­மா­னத்­தையும் நான் ஏற்­கத்­த­யா­ராக உள்ளேன்.இரண்டு, அத்­த­கைய தீர்­மானம் எது­வா­யினும் அதன் அடிப்­ப­டையில் கட்சி மாற­மாட்டேன்.  அதற்கு மாறாக வேறு ஒரு கட்­சியின் கூட்­ட­ணியின் வேட்­பாளர் பட்­டி­ய­லிலோ அல்­லது தேசிய பட்­டி­ய­லிலோ எனது பெயர் இடம்­பெ­றாது. எனவே கட்சி, கூட்டணி தலைமைகள் இலகுவாக தீர்மானம் எடுக்க ஏதுவாக அமைந்த எனது உறுதி மொழிகளின் அடிப்படையில் அவர்கள் கூட்டுப்பொறுப்புடன் தமது முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.