எதிர்வரும் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 20ற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தேசிய தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கபட்ட கூட்டமைப்பு தனித்துவமான வரலாற்று தன்மைகொண்டது. மக்களின் ஆணை எமக்கு நிச்சயம் கிடைக்கும். வன்னியில் 5 ஆசனங்களை நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம். வடகிழக்கில் 20ற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெறுவதற்கு நாம் முயற்சிசெய்வோம்.
கூட்டமைப்பு பலவீனப்படுத்தபடும் போது தேசிய தலைவரின் சிந்தனையும் பலவீனப்படுத்தும் நிலை காணப்படும்.கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்பை தடுப்பதற்காக பல்வேறு சுயேட்சை குழுக்கள் வன்னியில் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில். மக்களின் அரனாக கூட்டமைப்பு என்றும் செயற்படும். மற்றவர்கள் வாக்குகளை பிரிக்கும் செயற்பாட்டையே மேற்கொள்வார்கள்.
சர்வதேசம் எமக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலையை தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று உருவாக்கியுள்ளது. எனவே நாம் பலமான வெற்றிவாய்ப்பை பெறுவொம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
எம்மிலிருந்து பிரிந்தவர்களை கூட்டமைப்பே வெளிஉலகிற்கு காட்டியிருந்தது. அந்த அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு தாம் பெரியவர்கள் என்று நினைத்து செல்பவர்கள் உண்மையிலேயே தோல்வி காண்பார்கள் என்றார்.
இதேவேளை ரெலோ கட்சியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழரசுகட்சிக்கு மாறியமை தொடர்பாக கேட்டபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை கருதி தற்போது கருத்துக்கள் எதனையும் தெரிக்கவிரும்பவில்லை என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM