உலக அளவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் புதிய நோயாளிகள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் பக்கவாதத்தை தடுப்பதற்கு சைவ உணவு முறை பயனளிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்முடைய உணவு பழக்க வழக்கத்தை நாம் மாற்றியமைத்திருக்கின்றோம். இதன் காரணமாக எம்மில் பலரும் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் வருமுன் தடுப்பதற்கு வெஜிடேரியன் டயட் எனப்படும் சைவ உணவுமுறை பலனளிப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

நட்ஸ் எனப்படும் உலர் பருப்பு வகைகள், சோயா மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு முறையை பின்பற்ற தொடங் கினால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 75 சதவீதம் வரை குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இத்தகைய உணவு முறை பக்கவாதத்தை மட்டும் குறைக்காமல், உடல் பருமனை குறைக்கிறது என்றும், இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்றும், குருதி அழுத்தம் ஏற்படாமலும், டைப்-2 எனப்படும் ரத்த சீனியின் அளவையும் கட்டுப்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

வருமுன் காப்போம் என்ற விதியின்படி சைவ உணவு முறையை கடைபிடித்து பக்கவாதத்தை வராமல் தடுப்போம்.