அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘கன்னி மாடம்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்கும் ‘மங்கி டாங்கி’ என்ற திரைப்படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விதார்த் நடித்த ‘வண்டி’, போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஹசீர் தன்னுடைய ரூபி பிலிம்ஸ் என்னும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மங்கி டாங்கி’. 

அறிமுக இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்பிரமணியம் என்ற இரட்டையர்கள் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ‘கன்னிமாடம்’ பட புகழ் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், யுவினா ,எம்ஆர் கிஷோர் குமார், காளி வெங்கட், வந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறர்கள்.

இவர்களுடன் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறார். கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சுராஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் மே மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுடன் கூடிய சாகச படம் என்பதால் ‘மங்கி டாங்கி ’அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது,.