(இராஜதுரை ஹஷன்)

சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானித்தால் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது  இதுவரையில் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.   

சுதந்திர கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத்  தீர்மானித்தால்  எவ்வித தடைகளையும் ஏற்படுத்தமாட்டோம். மக்களே  இறுதியில்  யாருக்கு  ஆதரவு  வழங்க வேண்டும். என்பதைத் தீர்மானிப்பார்கள் என ரோஹித் அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் பொதுத்தேர்தலுக்கு முன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாதுகாப்பான  முறையில் தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். எந்நிலையிலும் மக்களுக்குப்  பாதிப்பு ஏற்படாது என மேலும் தெரிவித்தார்.