நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுபத்திரத்தில் இன்று அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கையொப்பம் இட்டனர்.

இன்று (18) காலை கைலாசபிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இட்டனர்.

தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.

இதையடுத்து ஊடகங்கள் முன் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் மக்கள் ஆணையோடு பாராளுமன்றம் தெரிவாகி மக்கள் சேவையை தொடர்வேன் என குறிப்பிட்டார்..