17 வயது பாடசாலை மாணவி ஒருவரை ஐந்து மாத கர்ப்பிணியாக்கியதாக சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா லக்கம் தனியார் தோட்டத்தில் வசித்து வந்த 27 வயதுடைய இளைஞர் அத்தோட்டத்தையே சேர்ந்த குறித்த மாணவியை 15 வயது முதல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தற்போது சாதாரண தர பரிட்சை முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அச்சிறுமியின் தாய் தந்தை கொழும்பில் பணியாற்றுவதுடன் குறித்த மாணவி சகோதரர் பாதுகாப்பில் இருந்து வந்த போதே அவர் வசித்து வந்த குடியிருப்பு பகுதியில் இருந்த இளைஞரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளதார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தாய் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் மாணவியை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய அதிகாரி பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் ஐந்து மாத கர்ப்பிணி என அறியகிடைத்ததாகவும் குறிப்பிட்டதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM