இலங்கை, இந்­தியா, இங்­கி­லாந்து 19 வய­துட்­குட்­பட்ட கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத்­தொடர் இலங்­கையில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

இந்­தியா மற்றும் இங்­கி­லாந்து 19 வய­து­க்குட்­பட்ட கிரிக்கெட் அணிகள் இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு இலங்­கை­யு­ட­னான முத்­தொ­டரில் மோது­கின்­றன. இந்தத் தொட­ருக்கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு நேற்­று­முன்­தினம் கொழும்பில் நடை­பெற்­றது.

இவ் ஊ­ட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பேசிய இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உய­ர­தி­காரி கார்ல்டன், அடுத்த ஆண்டு ஜன­வ­ரியில் பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள இளை­யோ­ருக்­கான உலகக் கிண்ணத் தொட­ருக்­கான முன் ஏற்­பாட்டுத் தொட­ரா­கத்தான் இந்த முத்­தொ­டரை கரு­து­கின்றோம்.

உலகக் கிண்­ணத்தில் மோதப்­போகும் இவ்­வ­ணிகள் சர்­வ­தேச அரங்­கு­களில் விளை­யாடி தங்­க­ளது அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். இந்தப் போட்­டிகள் அனைத்தும் சர்­வ­தேச அரங்­கு­க­ளான ஆர்.பிர­மே­தாச மற்றும் எஸ்.எஸ்.சி ஆகிய கிரிக்கெட் அரங்­கு­களில் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றன என்றார்.

இதில் பேசிய இலங்கை அணியின் பயிற்­சி­யாளர் ரொஜர் விஜே­சூ­ரிய, இங்­கி­லாந்து மற்றும் இந்­திய அணி­க­ளுடன் எமது அணி மோதப்­போ­வதை நாம் மிகப்­பெ­ரிய சாவாலாக எடுத்­துள்ளோம். இது எமக்கு இன்னும் இன்னும் பலம் சேர்க்கும் என்று எதிர்­பார்க்­கிறோம். இளை­ய­வர்­களை சர்­வ­தேச அள­விற்கும் அதே­வேளை தேசிய அணிக்கு பிர­வே­சிப்­ப­தற்­கான முன்­னேற்­பா­டா­கவும் இதைக் கரு­து­கிறோம் என்றார்.

இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள 19 வய­திற்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கான முத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் மோதுகின் றன. இப்போட்டி இன்று காலை10 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.