(எம்.எப்.எம்.பஸீர்)

 இலங்­கையில் கொரோனா தொற்­றுக்கு உள்­ளா­ன­தாக அடை­யாளம் காணப்­பட்ட  2 ஆவது  நப­ரான சுற்­றுலா வழி­காட்­டியின் மனைவி உட்­பட 15 பேர் நேற்று புதிய கொரோனா  தொற்று நோயா­ளர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.  

அதன்­படி தற்­போது இலங்­கையில் கொரோனா தொற்­றுக்கு உள்­ளான நிலையில் அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும்  நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 43 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக  கொரோனா வைரஸ் தொற்று பர­வலைத் தடுப்­ப­தற்­கான தேசிய நட­வ­டிக்கை மையம் தெரி­வித்­துள்­ளது.  

 இலங்­கையில் அடை­யாளம் காணப்­பட்ட 2 ஆவது தொற்­றா­ளரின் மனை­விக்கு மேல­தி­க­மாக புதி­தாக கொரோனா நோயா­ளர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டோரில், ஏற்­க­னவே அடை­யாளம் காணப்­பட்டு ஜேர்­ம­னிக்கு சுற்­றுலா சென்று திரும்­பிய நபர் ஒரு­வ­ருடன் தொடர்பில் இருந்த ஒருவர்,  ஐக்­கிய இராச்­சி­யத்தில் இருந்து நாடு திரும்­பிய ஒருவர், களனி, மார­வில பகு­தி­களைச் சேர்ந்த இருவர், கட்­டா­ரி­லி­ருந்து நாடு திரும்­பிய 26 வய­தான உடு­கம்­ப­லையை  சேர்ந்த இளைஞர் ஆகி­யோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.  9 பேரின் விப­ரங்­களை குறித்த மையம் வெளி­யி­ட­வில்லை.

அதன்­படி தற்­போது இலங்­கையில் ஒரு சிறுமி உள்­ள­டங்­க­லாக 4 பெண்­களும் 39 ஆண்­களும் கொரோனா தொற்று தொடர்பில்  அடை­யாளம் காணப்­பட்டு சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர்.

 இத­னை­விட நாட­ளா­விய ரீதியில் 17 வைத்­தி­ய­சா­லை­களில் 204 பேர்  கொரோனா தொற்று தொடர்பில் சந்­தே­கத்தில் சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக  சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரி­வித்­தது.  அதில் 15 பேர் வெளி­நாட்­ட­வர்கள் எனவும் அந்த பிரிவு  தெரி­வித்­தது. அங்­கொடை  தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் 72 பேரும்,  தேசிய வைத்­தி­ய­சா­லையில் 19 பேரும்  ராகம வைத்­தி­ய­சா­லையில் 6 பேரும்,  கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் 15 பேரும் அனு­ரா­த­புரம் போதனா  வைத்­தி­ய­சா­லையில் 6 பேரும் இவ்­வாறு சிகிச்சைப் பெறு­கின்­றனர்.

இத­னை­விட,  குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 13 பேரும் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒரு­வரும்,  கண்டி தேசிய வைத்­தி­ய­சா­லையில் நால்­வரும்,  மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் ஒரு­வரும்,  கம்­பஹா வைத்­தி­ய­சா­லையில் 14 பேரும்,  நீர் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் 15 பேரும்,  இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையில் 12 பேரும்,  பதுளை வைத்­தி­ய­சா­லையில் இரு­வரும், ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் இரு­வரும்,  பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லையில் 19 பேரும்,  களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் 3 பேரும் இவ்­வாறு கொரோனா சந்­தே­கத்தில் சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரி­வித்­தது.

 கடந்த ஜன­வரி முதல் இது­வரை குறித்த 17 வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் கொரோனா சந்­தே­கத்தில் 117 வெளி­நாட்­ட­வர்கள் உள்­ளிட்ட 759 பேர் கொரோனா சந்­தே­கத்தில் சிகிச்­சைக்கு வந்­துள்ள நிலையில் அவர்­களில் 204 பேரே தற்­போது சிகிச்­சைப்­பெற்று வரு­கின்­றனர்.

 இத­னை­விட வெளி­நா­டு­களில் இருந்து நாட்­டுக்குள் வந்­தோரை தனி­மைப்­ப­டுத்தி தொற்று நீக்கல் மற்றும் மருத்­துவ கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்த நாட­ளா­விய ரீதியில் இது­வரை 16 தொற்று நீக்கல் குறித்­தான தனி­மைப்­ப­டுத்தல் முகாம்கள்  நிறு­வப்­பட்­டுள்ள நிலையில்,  அவற்றில் 2258 பேர் மருத்­துவ கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக   முப்­ப­டை­களின் பதில் தலைமை அதி­கா­ரியும் இரா­னுவ தள­ப­தி­யு­மான கொரோனா தொற்று பர­வலை  தடுப்­ப­தற்­கான தேசிய நட­வ­டிக்கை மையத்தின் தலைவர் லெப்­டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ஸவின் பணிப்­பு­ரையின் பேரில் இலக்கம் 1090, ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர, ராஜ­கி­ரிய எனும் முக­வ­ரியில் கொரோனா தொற்று பர­வலை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை மையம் நேற்று ஸ்தாபிக்­கப்­பட்டு அதன் தலை­வ­ராக லெப்­டினன் ஜெனரால் சவேந்ர சில்வா நிய­மிக்­கப்­பட்ட நிலையில், அங்கு இடம்­பெற்ற ஊடக சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

மக்கள் நலனை உறுதி செய்­வ­தற்­கா­கவும் பொது சுகா­தாரம் மற்றும் ஏனைய சேவை­களை சிறப்­பான ஒருங்­கி­ணைப்­புடன் மேற்­கொள்­வ­தையும் உறுதி செய்யும் நோக்­கு­டனும் இந்த செய­லணி ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செய­ல­ணியின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்து சேவை­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக சேவை அவ­சி­யத்தின் முக்­கி­யத்­து­வத்­திற்­கேற்ப அனைத்து அதி­கா­ரி­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தோடு அதற்­காக அவர்கள் எந்­நே­ரமும் தயா­ராக இருக்க வேண்­டு­மென அரசு அறி­வித்­துள்­ளது.

  இத­னி­டையே கொரோனா தொற்­றுக்­குள்­ளா­னோரை கண்­கா­ணிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி ஆலோ­ச­னையின் பேரில் அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லைக்கு இணை­யான பிரி­வொன்றை பொலன்­ன­றுவை- வெலி­கந்­தையில் ஸ்தாபித்­துள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் விஷேட வைத்­திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.   நேற்று மாலை முதல் நோயா­ளர்­களை அங்கு அனுப்பும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக  அவர் குறிப்­பிட்டார்.

இது­வரை அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் மாத்­தி­ரமே கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நோயா­ளிகள் உள்­ளனர். ஆனால், மட்­டக்­க­ளப்பு, பொலன்­ன­று­வை­யி­லுள்ள கண்­கா­ணிப்பு மத்­திய நிலை­யங்­க­ளி­லேயே அதிக நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­ப­டு­வதால், அங்­கொடை வைத்­தி­ய­சா­லையை  போன்­ற­தொரு பிரிவை பொலன்­ன­று­வையில் ஸ்தாபிக்­கு­மாறு நேற்று முன்­தினம் இலங்கை இரா­ணு­வத்­திற்கு ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, குறித்த பிரிவு ஸ்தாபிக்­கப்­பட்­ட­தா­கவும், வெலி­கந்தை ஆதார வைத்­தி­ய­சாலை  கட்­டிடம் இவ்­வாறு மாற்றம் செய்­யப்­பட்டு தொற்று நோய் தடுப்புப் பிரி­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்,  பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ளரின் கீழ் அந்த பிரிவு இயங்­கு­மென்றும்  வைத்­திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

 இத­னி­டையே  இத்­தாலி  உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடுகள், ஈரான் மற்றும் கொரி­யா­வி­லி­ருந்து  கடந்த மார்ச் முதலாம் திக­திக்கும் 10 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் நாட்டை வந்­த­டைந்த  அதி­க­மானோர் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையை தவிர்த்­துள்­ள­தாக பாது­காப்பு அமைச்சு  நேற்று அறி­வித்­தி­ருந்­தது.  

அக்­கா­லப்­ப­கு­தியில் அவ்­வாறு வருகை தந்தோர், 119 இலக்கம் ஊடா­கவோ அல்­லது அருகில் உள்ள பொலிஸ் நிலை­யத்­திலோ பதிவ்  செய்­யு­மாறு அந்த அமைச்சு கோரி­யி­ருந்­தது.  பொலிஸ் நிலை­யத்தில் பதி­வு­செய்­யாத அவ்­வா­றான நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பாது­காப்பு அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 நேற்று மாலை வரை 119 மற்றும் பிர­தேச பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு அவ்­வா­றா­ன­வர்கள் குறித்த 3000 தக­வல்கள் கிடைத்­த­தாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.  அவற்றில் பல தக­வல்கள் இரண்டு மூன்று முறை வீதம் பதிவு செய்­யப்­பட்­டதால் அவ்­வா­றான  பாரிய தொகை தக­வ­லாக அவை கணிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­க­ட­டிய அவர்,  குறித்த மார்ச் முதலாம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வருகை தந்து பதிவு செய்யாத 548 பேர் நேற்று மட்டும் பதிவு செய்துகொண்டதாக கூறினார்.

 அவ்வாறான மேலும் பலர் உள்ள நிலையில், அவர்கள் தம்மை பதிவு செய்து சுய தனிமைபப்டுத்தல் மற்றும்  தொற்று நோய் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு, 119 இலக்கத்துக்கு மேலதிகமாக 0112444480, 0112444481, 0115978730, 01159720, 0115978734 ஆகிய இலக்கங்களுக்கும் lahd@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளுமாறு அவர் கோரினார்.

 வெளிநாடுகளில் இருந்து குறித்த காலப்பகுதியில் வந்த வெளிநாட்டவர்களும் கண்டிப்பாக அந்த இல்லக்கங்களுக்கு அழைத்து பதிவு செய்தல் வேண்டும் எனவும் அவர் கூறினார்