நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தற்பொழுது இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை விசாக்களுக்குமான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையான விசாக்களின் கால எல்லையும் நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.