வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள உறவுகளைப் பார்வையிடச் செல்வதை இயன்றளவு தவிர்க்கவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Image result for வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

அத்தியாவசியமாக செல்ல வேண்டும் எனில் ஒருவர் மட்டும் வைத்தியசாலைக்கு சென்று விரைவாக திரும்புதல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்கள் தங்களின் வீட்டிற்குரிய விஷேசங்களை தள்ளிப்போடுங்கள் அல்லது உங்கள் வீட்டு அங்கத்தவர்களுடன் மட்டும். கொண்டாடி மகிழுங்கள். உங்களுக்கு கொரோனா நோய்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் சிகிச்சைக்காக உங்களுக்கு அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.

அவசியமற்ற பயணங்களை தவிருங்கள். பொதுப் போக்குவரத்து சேவைகளை பாவிப்பதை இயன்றளவு தவிர்க்கவும். அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஆரோக்கியமான ஒருவர் மட்டும் வெளியில் சென்றுவருதல் நன்று. வெளியில் சென்று திரும்புபவர்கள் வீட்டிற்குள் உட்புகமுன் சவர்க்காரமிட்டு கைகள் கழுவுவதற்குரிய ஒழுங்கினை செய்தல் வேண்டும்.

வைத்தியசாலையில் உள்ள உங்கள் உறவுகளைப் பார்வையிடச் செல்வதை இயன்றளவு தவிர்க்கவும். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஒருவர் மட்டும் வைத்தியசாலைக்கு சென்று விரைவாக திரும்புதல் மிகவும் நன்று.

அரசாங்க திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் அத்தியவசியமான தேவைகள் அன்றி செல்வதை தவிருங்கள். உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட ஒத்துழைப்பு இக்கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.