கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் முயற்சியில் நகரில் கூடும் பயணிகளிற்கு இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகர சபை உறுப்பினரின் சொந்த நிதியில் இருந்து மக்களை விழிப்பூட்டி சுகாதார நடவடிக்கையில் வழிகாட்டுவதோடு ஏனைய உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் ஆயிரம் முகக்கவசங்கள் தயாரித்து விநியோகிக்கும் பணி யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக 150 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவற்றை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் வழங்கி வைத்தார்.

இதன்போது குடாநாட்டிலிருந்து பிற மாவட்டங்களிற்குப் பயணிக்கும் தனியார் பஸ் நிலையத்திலிருந்து புறப்படத் தயாரான பஸ் நடத்துனர்கள் , சாரதிகள் , பயணிகளிற்கும் மற்றும் பாதசாரிகளிற்கும் வழங்கப்பட்டன.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்களான ம.அருள்குமரன் , ப.தர்சானந் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.