நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற்கொண்டு, நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி நேற்றிரவு விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். 

அதில் முக்கிய விடயமாக நேற்று இரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதோடு, அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் அறிவித்திருந்தார். மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்தவும், அவர்களின் நுகர்வின் அளவை உறுதிப்படுத்தவும் தாம் முன்மொழிவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய, போதியளவு அரிசி விநியோகம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.