நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

Published By: R. Kalaichelvan

17 Mar, 2020 | 08:55 PM
image

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட  2 ஆவது  நபரான சுற்றுலா வழிகாட்டியின் மனைவி உட்பட 43 பேர் இன்று புதிய கொரோனா  தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

அதன்படி தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும்  நோயாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

இதனைவிட நாடளவைய ரீதியில் 17 வைத்தியசாலைகளில் 204 பேர்  கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்தது.  

அதில் 15 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அந்த பிரிவு  தெரிவித்தது. 

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தோரை தனிமைப்படுத்தி தொற்று நீக்கல் மற்றும் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்த நாடளவைய ரீதியில் இதுவரை 16 தொற்று நீக்கல் குறித்தான தனிமைப்படுத்தல் முகாம்கள்  நிறுவப்பட்டுள்ள நிலையில்,  அவற்றில் 2,258 பேர் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக   முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான கொரோனா தொற்று பரவலை  தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54