ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் பிரதித் தலைவர் கோசோ தாஷிமா கோரோன தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இன்றைய தினம் ஜப்பான் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோசோ தாஷிமாவுக்கு இலகுவான காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர் வைத்திய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்போதே அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோசோ தாஷிமா, இந்த தகவலை ஜப்பான் கால்பந்து சங்கத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார்.

தாஷிமா அண்மைய நாட்களில் வடக்கு அயர்லாந்து, ஹொலந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு வணி பயணங்களை மேற்கொண்டிருந்தார். 

இதன்போது அவர் ஏனையவர்களுடன் கைகுலுக்கள் மற்றும் கட்டியணைப்பு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் கோசோ தாஷிமா சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே இந்த தகவல் தற்போது வெளி வந்துள்ளது.