மக்கள் எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் தவிர்க்கவும் ;  சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

Published By: Digital Desk 4

17 Mar, 2020 | 06:15 PM
image

வடக்கு மாகாண மக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் வீதிகளில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

“எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதியாகும். எனவே பொதுமக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் வடக்கில் கோரனோ வைரஸ் தொற்றினை தவிர்த்துக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கோரொனா பற்றிய மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதோடு அவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பொதுவெளியில் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் கோரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று (17.03.2020) நடைபெற்றது.

வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.

அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு பெருமளவில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லல்.

பொது மக்கள் ஒன்று கூடும் வைபவங்கள், நிகழ்வுகள், விழாக்களை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தல்.

ஏற்கனவே ஒழுங்கு செய்யபட்ட குடும்ப நிகழ்வுகளை (திருமண விழா, புப்புனிதநீராட்டு விழா, பிறந்தநாள், அந்தியேட்டி) மட்டுப்படுத்தபட்ட அளவுகளில் மிக அவசியமான உறுப்பினர்களுடைய பங்குபற்றுதலோடும் பாதுகாப்பாக நடாத்துவதனை உறுதிபடுத்தல்.

அரசால் அறிவிக்கபட்ட 14 நாடுகளில் இருந்து (ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஒஸ்ரியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெய்ன், சுவிஸ்ஸர்லாந்து, ஐக்கியராட்சியம், பெல்ஜியம், நோர்வே,) குறித்த காலத்துக்குள் (மார்ச் 1 இல் இருந்து) வருகை தந்தவர்கள் தங்களை தனிமைபடுத்துவதோடு, ஏற்பாடு செய்திருக்கும் சகல விசாரணை மற்றும் பரிசோதனைகளுக்கு தங்களை அவசியம் உட்படுத்த வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தனியார் நட்சத்திர விடுதிகளில் தங்கியிருப்போர் உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தல்.

முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பயணிகள் மறு அறிவித்தல் வரும் வரை செல்லவதை தடுத்தல்

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 15.03.2020 சுற்றறிக்கைக்கு அமைவாக ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள், போன்றவற்றிற்கு பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகளைத் தவிர இதர காரணங்களுக்காக செல்வதை தவிர்க்க வேண்டும்

மோட்டார் வாகன வரி அனுமதி பத்திரங்களை 17.03.2020 தொடக்கம் 31.03.2020 வரை புதுப்பிக்க இருப்பவர்களுக்கு புதுப்பித்தல் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது இவ் அறிவித்தல் போக்குவரத்து பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் பிரத்தியேக மற்றும் கல்விசார்ந்த நிகழ்ச்சிகள், பிரதேச மட்ட கழக விளையாட்டு நிகழ்வுகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்களின் மக்கள் ஒன்று கூடும் சகல நிகழ்ச்சிகளும் இருவாரங்களுக்கு தடை செய்யப்படுகிறது.

பொது போக்குவரத்து வாகனங்கள் முழுமையான கிருமித்தொற்று நீக்கலுக்கு அவசியம் உள்ளாக்கபடல் வேண்டும்.

மேற்குறித்த தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அனைவருடைய பாதுகாப்பையும் கருதி பொறுப்புணர்வோடு செயற்படுத்துவதென இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08