இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை அத்தியவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதை தவிர ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாவட்ட செயலகத்துக்கு வருகைதரவேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார் 

குறிப்பாக காணி விடயங்கள், வீட்டுத்திட்டம், அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ளல், தனிப்பட்ட சந்திப்புக்கள் மற்றும் முறைப்பாடுகள் வழங்கல் போன்ற சேவைகளை  பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாவட்ட செயலகத்துக்கு பொதுமக்களை வருகைதரவேண்டாம்  எனவும் இவ்வாறான சேவைகளை பெற்றுக்கொள்ள 

021 229 0035 மற்றும் 021 229 0036 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது gamullaitivu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் மேலதிக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவசர நிலையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .