பண்டாரவளை எல்லதொட்டை என்ற இடத்தில் இன்று பகல் 12.00 மணியளவில் லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் நூறு அடி பள்ளத்தில் வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த வீட்டில் சம்பவத்தின் போது எவரும் இல்லாதலால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்பட்டவில்லை. 

ஆனால் லொறி சாரதி படுங்காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டள்ளது. 

இந்நிலையில் குறித்த சாரதி தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.