இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Published By: Vishnu

17 Mar, 2020 | 02:25 PM
image

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபாவில் 185.08 ரூபாவாக உள்ளது.

இதேவளை இன்றிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தற்பொழுதுள்ள ஒதுக்கு பேணப்படுகின்ற காலப்பகுதியில் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா சார்ந்த வைப்புப் பொறுப்புக்களுக்குமான நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கும் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, அதன் நாணயக் கொள்கை நிலைப்பாடு தொடர்பாக நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போதே இந்த முடிவினை எடுத்தது.

உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) தொற்றுநோய் பரவல் மற்றும் அதன் இலங்கை மீதான சாத்தியமான பரவலுடனும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசரமாக ஆதரவளிக்கும் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு நாணயச் சபையானது இத்தீர்மானத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48