வட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

17 Mar, 2020 | 01:57 PM
image

வடக்கு மாகாணத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை. எனினும்கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இதுவரையில் பரவும் வைரஸ் தொற்றுக்கு 28 பேர் இலக்காகி உள்ளனர்.வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.எனினும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தற் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பொதுமக்களுக்கான சில அறிவுறுத்தல்கள் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள மக்கள் தமது பயணத்தை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வர விரும்புபவர்களும் தமது பயணத்தை பிற் போடவேண்டும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பில் அந்தந்த பகுதி குடும்பநிலை உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்க வேண்டும்.பொதுமக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக விளையாட்டு போட்டிகள் கலை கலாசார சமய நிகழ்வுகள் தேசிய கலந்துரையாடல்கள் கூட்டங்களையும் மறு அறிவித்தல் வரை அவற்றை தவிர்க்க வேண்டும்.

அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டாலும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம். அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் .குடும்ப நிகழ்வுகளான பிறந்தநாள்  திருமணம் போன்றநிகழ்வுகளையும்  கொண்டாடவேண்டாம்.அவ்வாறு  இல்லாவிட்டாலும் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களுடன் அந்த நிகழ்வுகளை இயலுமான அளவு கொண்டாடிக் கொள்ளுங்கள்.யாழ்ப்பாணத்தில் உள்ள சில இடங்களில் பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளில் அதிகமானவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதை நாங்கள் அவதானித்தோம் இந்த செயற்பாடு பொருத்தமானதல்ல.

வணக்கத் தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் இது தொடர்பில் வணக்கத் தலங்களாக பொறுப்பானவர்கள் அந்த நிகழ்வுகளை தவிர்க்க முடியாவிட்டாலும் அதிகளவான மக்களை உள்வாங்காமல் நடத்த வேண்டும் ஒவ்வொரு தனி நபர்களும் தங்களது சுகாதாரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் வைரஸ் தாக்கம் இதுவரை எமது மாகாணத்தில் ஏற்படாவிட்டாலும் நாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31