கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை பார்வையிடுவதற்காக கூட்டு எதிரணியின் சில உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பலரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில், விசேட பொலிஸ்  விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்ட உதய கம்மன்பிலவை, எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.