இலங்கை வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தையும் இன்று முதல் தடைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிலநாடுகளில் இருந்து இலங்கை வரும் விமானங்களை ஏற்கனவே சிவில் விமான போக்குவரத்து சபை தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் நாட்டுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களையும் இன்று முதல் தடை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கான நடடிவடிக்கையாக ஆரம்பத்தில் யாழ் சர்வதேச விமான நிலையம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையில் ஈரான் , தென்கொரியா, இத்தாலி , ஐரோப்பா , கனடா, பஹ்ரைன் ,கட்டார் ஆகிய நாடுகளுக்கான விமானங்களின் வருகையும்  தற்காலிக தடை விதிக்கப்பட்டன.