இயக்குனர் ஜோன்சன் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக முன்னணி நடிகை அனைகா சோட்டி நடிக்கிறார்.
தேசிய விருதுப் பெற்ற‘காவியத்தலைவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனைகா சோட்டி. அதன் பிறகு அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திலும், நடிகர் ஜீவா நடித்த ‘கீ’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் சந்தானம் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ஜோன்சன் கே இயக்குகிறார். இவர் ஏற்கனவே சந்தானம் நடித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘A 1’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் குறித்து அனைகா சோட்டி பேசுகையில்,“ வடசென்னையில் வாழும் தாதா ஒருவனைப் பற்றிய கதை. கொமடி வித் திரில்லர் ஜோனரில் தயாராகும் இந்தப்படத்தில் நாயகன் சந்தானம் வடசென்னை தாதாவாக நடிக்கிறார்.
நான் மலேசியாவில் இருக்கும் டானின் மகளாக நடிக்கிறேன். படப்பிடிப்பு சென்னை. மலேசியா. மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதன் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி இருக்கிறது.” என்றார்.
ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM