நாட்டில் புத்தளம், கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் தென் மாகாணத்தின் சில இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் சாத்தியம் அதிகமாகவுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சன நடமாடத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.

இந்நிலையில், இலங்கையில் இது வரை 28 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார். அதேவேளை 204 பேர் வைத்திய பரிசோதணையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குறித்த பகுதிகளில் இத்தாலி நாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கி இருப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் சாத்தியம் அதிகமாகவுள்ளதாக தெரிவித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்,  அவர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.