வெளியில் சென்று வந்த கணவன் வீட்டுக்குள் வரும் போது கையை கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியில் உள்ள நபரொருவர் வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது கைகளை கழுவும்படி அறிவுறுத்துதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே நீங்களும் கைகளை கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் என்று கூறிய போது ஆத்திரம் அடைந்த கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.