கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆன்மீக தேடலின் ஒரு கட்டமாக திருநீலகண்ட கசாயம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பேச்சியம்மன் ஆலய நிர்வாகம் இந்த ஆன்மீக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

13 வகையான மூலிகைகளைப் பயன்படுத்தி இக் கசாயம் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கோவில் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

பங்குனித்திங்கள் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை 2020.03.16 மாலை இந்நிகழ்வு திருகோணமலை பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

பெருமளவிலான பொதுமக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இந்த திருநீலகண்ட கசாயத்தை பெற்றுச் சென்றனர்.