தனிப்பட்ட நலன்களுக்காகவே புதிய கூட்டு உருவாகியுள்ளது - வஜிர செவ்வி

17 Mar, 2020 | 11:13 AM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்­புக்கு அமை­வாக யானை சின்­னத்­தினை பின்­பற்ற வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில், கட்­சி­யி­லி­ருந்து ஒரு­சி­லரின் தனிப்­பட்ட அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவே புதிய கூட்­டணி உரு­வாக்­கப்­பட்டு பிறி­தொரு அர­சியல் கட்­சி­யாக பரி­ண­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ரணில் அணியைச் சேர்ந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரிவித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வடிவம் வரு­மாறு:

கேள்வி:- சஜித் பிரே­ம­தாஸ தலைமையி­லான ஐக்­கிய மக்கள் சக்தி தரப்­பி­ன­ருடன் ஐக்­கிய தேசியக் கட்சி இணை­வது பற்­றிய பேச்­சுக்கள் முன்னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா?

பதில்:- அவர்கள் ஒரு தரப்­பாக இல்லை. அவர்கள் தற்­போது அர­சியல் கட்­சி­யாக உரு­வெ­டுத்­துள்­ளார்கள். ஆகவே கட்சி ரீதி­யான அர­சியல் தரப்­பினர் என்ற அடிப்­ப­டையில் தான் பார்க்க வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் எந்தக் கட்­சி­யு­டனும் இணைந்து பய­ணிப்­ப­தற்­கு­ரிய பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே இருந்து வரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் ஐ.தே.க பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க எப்­போதும் தயா­ரா­கவே இருக்­கின்­றது.

கேள்வி:- பேச்­சு­வார்த்­தைகள் தற்­போதும் நடை­பெ­று­கின்­றதா என்று தான் கேட்டேன்?

பதில்:- அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­வது இயல்­பா­னது.

கேள்வி:- நாட்டின் பழம்­பெரும் கட்சியான ஐ.தே.கவிலி­ருந்து கணிசமான தரப்­பினர் வெளி­யேறி புதிய அர­சியல் கட்­சி­யையும் கூட்டையும் உருவாக்கியுள்ளமையானது நடைபெற­வுள்ள பொதுத்­தேர்­தலில் உங்க­ளுக்கு மிகப்­பெரும் சவா­லாக இருக்கின்றதல்லவா?

பதில்:- போட்­டி­யொன்றில் சவால்கள் நிறைந்­தி­ருந்தால் வெற்­றியை நோக்கி செல்ல முடியும். அத­ன­டிப்­ப­டையில் இவ்­வா­றான சவால்கள் தான் ஐ.தே.கவை வெற்­றி­பெறச் செய்யும்.

கேள்வி:- ஐ.தே.கவினுள் ஏற்­பட்­டுள்ள பிள­வுக்கு பின்­ன­ரான நிலை­மையில் கிராம மட்­டங்­களில் தொடர்ந்தும் அதன் ஆத­ர­வுத்­தளம் வலு­வா­ன­தாக இருக்­கின்­றது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- அதனை தற்­போது கூறி­வி­ட­மு­டி­யாது. காரணம், தேர்­த­லுக்­கான பூர்­வாங்க செயற்­பா­டு­களே தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன. ஆகவே ஓரிரு வாரங்கள் நிறை­வ­டைந்த பின்­னரே அது­பற்­றிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்த முடியும்.

கேள்வி:- ஐ.தே.க யானைச் சின்­னத்தில் தான் கள­மி­றங்கும் என்ற முடிவில் எதிர்­கா­லத்தில் மாற்­றங்­களை எதிர்பார்க்க முடி­யுமா?

பதில்:- இல்லை. ஒரு­போதும் மாற்­றங்கள் நிக­ழாது. பழம்­பெரும் கட்­சி­யான ஐ.தே.க யானை சின்­னத்­தி­லேயே கள­மி­றங்கும். அதுவே ஒவ்­வொரு கட்சித் தொண்­டர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்­களின் நிலைப்­பாடாக இருக்­கின்­றது.

கேள்வி:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்­டணி பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது சின்னம் குறித்து கரி­சனை செலுத்தவில்லையா?

பதில்:- சின்னம் குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் பல மட்­டத்தில் நடை­பெற்றன. நீண்ட ஆராய்­வுகள் எல்லாம் இடம்­பெற்­றன.  

கேள்வி:- அப்­போது இணக்கப்பாடுகளை எட்­டாது இறு­தித்­த­ரு­ணத்தில் சின்­னத்­தினை காரணங்காட்டி வலு­வான கூட்­டணி அமையும் சந்தர்ப்­பத்­தினை ஐ.தே.க தலைவர் ரணில் கைந­ழுவ விட்­டு­விட்­டாரே?

பதில்:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்தார். குறிப்­பாக, எதிர்க்­கட்சித் தலைவர் பதவி, தேர்தல் கூட்­டுக்­கான தலை­மைப்­ப­தவி, பிர­தமர் வேட்­பாளர் என்­றெல்லாம் அடுக்கிச் செல்ல முடியும்.

ஆனால் சின்னம் விட­யத்தில் அவரால் எதுவும் செய்­ய­மு­டி­யாது. காரணம், ஐக்­கிய தேசியக் கட்­சியை மையப்­ப­டுத்­திய பல கூட்­டுக்கள் கடந்த காலத்தில் நடை­பெற்­றி­ருந்­தன. ஆனால் எங்கும் யானை சின்னம் மாற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பில் ஐ.தே.க தலை­மையில் கள­மி­றங்­கும்­போது யானை சின்­னமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­றுள்­ளது. ஆகவே தான் அவர் உள்­ளிட்ட மேலும் சிலர் அந்த விட­யத்­தினை சுட்­டிக்­காட்­டினர். யானை சின்னம் தொடர்பில் இறுக்­க­மா­கவும் இருந்து வரு­கின்­றனர்.

கேள்வி:- முக்­கிய உறுப்­பி­னர்கள் வெளியே­றி­யுள்ள நிலையில் பல­மான புதிய வேட்­பா­ளர்­களை கள­மிறக்குவது சவால் மிக்க செயற்பா­டாக இருக்­கு­மல்­லவா?

பதில்:- ஐ.தே.க நேற்று, நேற்று முன்­தினம் உரு­வா­கிய கட்­சி­யல்ல. மிகப்­பெரும் எண்­ணிக்­கை­யான தொண்­டர்­களை கொண்ட வர­லாற்றுக் கட்­சி­யாகும். ஆகவே வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வதில் எவ்­வி­த­மான குறை­பா­டு­களும் ஏற்­ப­டாது. மிகச் சிறந்த வேட்­பா­ளர்­களே இம்­முறை கள­மி­றக்­கப்­ப­டு­வார்கள். அதற்­கான சக்தி ஐ.தே.கவுக்கு உள்­ளது.

கேள்வி:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் உள்ள சில தரப்பினரே தமது தனிப்­பட்ட அர­சியல் நலன்­க­ளுக்­காக ஐக்­கி­யத்­துக்கு தடை­யாக உள்­ள­தாக சஜித் தரப்பில் குற்­றச்­சாட்டு அடுக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அவர்கள் செயற்­பாட்டு ரீதி­யாக அத­னையே செய்­துள்­ளார்கள். அவர்­களின் தனிப்­பட்ட அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவே தாய்க்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி புதிய கட்­சியை ஆரம்­பித்­துள்­ளார்கள். நாம் ஐ.தே.கவை பாது­காக்கும் செயற்­பாட்­டி­னையே முன்­னெ­டுத்­துள்ளோம்.

கேள்வி:- ஐ.தே.க இரு­கூ­று­க­ளா­கி­யுள்­ள­மையால் ஆகக்­கு­றைந்­தது ஆளும் தரப்­புக்கு எதி­ரான பலம்­மிக்க எதிர்க்­கட்­சி­யொன்று கூட உரு­வாக முடி­யாத நிலைமையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை உண­ரு­கின்­றீர்­களா?

பதில்:- இதனை உணர வேண்­டி­ய­வர்கள் பிரிந்து சென்ற தரப்­பி­னரே தவிர நாம் அல்லர். காரணம் கடந்த 20வரு­டங்­க­ளாக அந்த தரப்­பி­னரே கட்­சிக்குள் இருந்­து­கொண்டு தலை­மைக்கு எதி­ரான சூழ்ச்­சி­களை முன்­னெ­டுத்­தார்கள். தலை­மைக்கு எதி­ரான நேர்­ம­றை­யான பிர­சா­ரங்­களை செய்­தார்கள்.  

இவ்­வா­றான செயற்­பா­டு­களால் கட்­சியின் கீழ் மட்­டங்­களில் உள்ள ஆத­ர­வா­ளர்­களும் திசை­தி­ருப்­பப்­பட்­டுள்­ளனர். இந்த விட­யத்­தினை தற்­போது ஆத­ர­வா­ளர்கள் நன்கு உணர்ந்­துள்­ளார்கள். ஆகவே அவர்கள் நிச்­ச­ய­மாக ஐ.தே.கவு­ட­னேயே தொடர்ந்தும் இருப்­பார்கள் என்ற விடயம் தற்­போது புல­னா­கி­யுள்ளது. எனினும் தேர்­தலின் பின்னர் அந்த யதார்த்தம் வெளி­யாகும்.

கேள்வி:- ஐ.தே.கவுடன் இணைந்­தி­ருந்த முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி போன்ற சிறு­பான்மை தேசிய இனங்களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தரப்­புகள் வெளி­யே­றி­யுள்­ள­மை­யா­னது பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்­தாதா?

பதில்:- 1988இற்குப் பின்­ன­ரான அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு அமை­வாக, ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சிறு­பான்மை தரப்­பினர் அர­சியல் கட்­சி­க­ளுடன் கூட்­டணி அமைத்து பய­ணிக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டையில் அன்­றி­லி­ருந்து சிறு­பான்மை தேசிய அர­சியல் தரப்­புகள் ஐ.தே.கவு­ட­னேயே பய­ணிக்­க­லா­கின. ஆனால் தற்­போது அந்த நிலைமை முற்­றாக மாறி­யுள்­ளது. ஒரு­வேளை, அவர்­க­ளுக்கு காணப்­படும் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் அவ்­வா­றான தீர்­மா­ன­மொன்றை எடுத்­தி­ருக்­கலாம். எவ்­வா­றா­யினும் ஐ.தே.கவுக்கு தீங்­கி­ழைத்­த­மைக்­கான பொறுப்­புக்­கூ­றலை அவர்­களும் செய்­தாக வேண்டும்.  

கேள்வி:- தொடர்ச்­சி­யாக நான்கு தசாப்­த­ கா­ல­மாக அர­சி­யலில் இருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த தலை­மு­றை­யிடம் பொறுப்­பு­களை ஒப்­ப­டைப்­பதில் தயக்கம் காட்டுவதேன்?

பதில்:- அவ­ரு­டைய தலை­மையில் கட்சி ஒழுக்­க­நெ­றி­க­ளுடன் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் எதிர்­கா­லத்தில் ஒழுக்க நெறி­களை பின்­பற்றும் தரப்­பி­டத்தில் கட்­சியை ஒப்­ப­டைக்க வேண்­டிய பாரிய கட­மை­யொன்று அவர் முன்னால் இருக்­கின்­றது. கூட்­டணி அமைப்­ப­தாக கூறி அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களிடத்தில் ஒழுக்க நெறிகள் இருக்கின்றதா என்ற கேள்வியும் எமக்குள்ளது. மேலும் அவர்களின் செயற்பாடானது வெறுமனே பழிதீர்ப்பதையும் பதவிகளையும் மையப்படுத்தியதாக இருக்கின்றது. தற்போது பிரிந்து சென்ற அணியானது எந்தவிதமான ஒழுக்க நெறிகளையும் பின்பற்றவில்லை என்பதை இந்த நாட்டில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

கேள்வி:- ஐ.தே.க ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டதாக அதன் சிரேஷ்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில் என்ன?

பதில்:-  2015ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. இதனால் எம்மால் தமிழ் மக்களுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளமையை ஏற்றுக்கொள்வதோடு அதனையிட்டு கவலையடைகின்றோம்.

நேர்காணல் - ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04