மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதான வீதியில் நேற்று மாலை 16.03.2020 ஏற்பட்ட விபத்தில் முதியவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த முதியவர் கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்து கிடந்த முதியவர் மீது தொடர்ந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏறிச் சென்றுள்ளது.

இவ்விரு மோட்டார் சைக்கிள்களாலும் மோதுண்டதில் படுகாயமடைந்த நிலையில் கிடந்த  அந்த வயோதிபர் உதவிக்கு விரைந்தோரால்   அவசர சேவை அம்பியூலன்ஸ் அழைக்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.