மைக்ரோசொப்ட் அதன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் உலகளாவிய ரீதியில் மூடுவதாக அறிவித்துள்ளது.

இதனை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

அதில், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் வர்த்தக நிலையங்களையும் அதன் இருப்பிடங்களையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுகிறோம்.

"இந்த நேரத்தில் குடும்பங்கள், தொலைதூர தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள் தனித்துவமான அழுத்தத்தில் இருப்பதை நாங்கள் அறிவோம், மைக்ரோசொப்ட் இணையத்தளம் ஊடாக உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்" என்று மைக்ரோசொப்ட் ஸ்டோர் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, அனைத்து உலகளாவிய மைக்ரோசொப்ட் கடைகளையும் இருப்பிடங்களையும் உடனடியாக மூடுவதாக அறிவித்துள்ளது.