நோய் அறிகுறி வெளிப்படாதவர்களே வைரசை பரப்புகின்றனர்- சர்வதேச நிபுணர்கள் தகவல்

16 Mar, 2020 | 09:31 PM
image

வைரஸ் தொற்றிற்குள்ளாகி நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமலிருப்பவர்களே வைரசினை பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என்பது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் வெளியாகியுள்ளது என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்றிற்குள்ளான போதிலும்  நோய்க்கான அறிகுறி வெளிப்படாமலிருப்பவர்கள்   நோய் பரவுவதற்கு எவ்வளவு தூரம் காரணம் என்பது இன்னமும் தெரியாத போதிலும்; அறிகுறிகள் தென்படாத அல்லது சிறிதளவு அறிகுறிகள் உள்ளவர்களே நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளனர் என பல நிபுணர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுதலே வைரஸ் பரவுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது என அமெரிக்காவின் மினெசொட்டா பல்கலைகழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை பிரிவின் இயக்குநர் மைக்கல் ஒஸ்டர்ஹோம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சர்வதேச நோய்தொற்றினை நோய் அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலமான பரவுவதலால் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இதனை கட்டுப்படுத்துவது கடினமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதளவு நோய் தொற்றுள்ளவர்கள் மூலம்  அல்லது நோய் தொற்று  அறிகுறி வெளிப்படாதவர்கள் மூலம் கொரோனா பரவுவதால் சார்சினை விட இதனை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பல நிபுணர்கள் நோய்அறிகுறி வெளிப்படாதவர்களே காரணம் என்பதை ஏனைய பல நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நோய் அறிகுறி வெளிப்படாதவர்களும் சிறிய அறிகுறிகள் காணப்படுபவர்களுமே நோய் தொற்றிற்கு காரணம் என வில்லியம் ஸ்காவ்னெர் என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவர்களே சமூகங்களில் நோயை பரப்பபோகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் நோய் பரவுவது குறித்து தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52