கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி  ஒருவருக்கு முதலாவதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இதையடுத்து ஏனைய அதிகாரிகளை சுய கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.