இலங்கையில் அறிமுகமாகவுள்ளது Huawei P9

Published By: Priyatharshan

20 Jun, 2016 | 11:58 AM
image

இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியான Huawei P9 இனை ஜுன் மாத கடைசிப்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. 

உயிரோட்டம் கொண்ட வர்ணங்கள் மற்றும் மிருதுவான கறுப்பு மற்றும் வெள்ளை படங்களை அதிகமான துல்லியம் மற்றும் தெளிவுடன் தருகின்ற இரட்டை வில்லைகள் கொண்ட கமராவை முதன்முதலாகக் கொண்டுள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரிப்பதற்கு Leica என்ற ஜேர்மனிய நிறுவனத்தின் பங்குடமையுடன் இணைந்து Huawei நிறுவனம் செயற்பட்டுள்ளது.

Leica இரட்டை வில்லைகளுடன் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அதிசிறப்பை கலவையாகக் கொண்டுள்ள Huawei P9, கையடக்கத்தொலைபேசியானது நேர்த்தியான, கைக்கு அடக்கமான வடிவில் இருப்பதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி அதியுயர் தரத்திலான படங்களை ஒவ்வொரு தருணங்களின் போதும் கைவசப்படுத்துவதற்கு இடமளிக்கின்றது. 

அதிசிறந்த நிறம், அசாத்தியமான கறுப்பு மற்றும் வெள்ளை மற்றும் Leica படங்களின் தத்ரூபமான தோற்றம் ஆகியவற்றை Huawei P9 கைவசப்படுத்துகின்றது. 

ஒரு RGB மற்றும் ஒரு ஒரேவர்ண (monochrome) என இரு சென்சார் சாதனங்களைக் கொண்டுள்ளமை சாதனத்திற்கு மேலும் துல்லியத்தை சேர்ப்பிப்பதுடன், வியத்தகு வகையில் படங்களை கைவசப்படுத்த உதவுகின்றது. 

RGB சென்சார் சாதனத்தால் கையகப்படுத்தப்பட்ட வர்ணங்களை, monochrome சென்சார் மூலமாக வேறுபடுத்தி, அவற்றை சிறப்பாக இணைக்கும் வழிமுறையை Huawei P9 கொண்டுள்ளது.

P9 இலுள்ள 5.2 அங்குல பூரண HD முகத்திரையானது ஹாலிவுட் படங்களின் வண்ண வரிசைகளை உபயோகிப்பதால், முகத்திரையானது 96 சதவீதமான நிற வரிசைகளை உள்ளடக்குவதற்கு இடமளிக்கின்றது. இரட்டை வில்லைகளைக் கொண்ட 12MP  கமரா, 12MP மற்றும் BW சென்சார் சாதனங்களைக் கொண்டுள்ளதுடன், லேசர் துணையுடனான இலக்கு நோக்கலையும் கொண்டுள்ளது. இது மற்றைய கைடயக்கத் தொலைபேசிகளை விடவும் 200 சதவீதம் அதிக உணர்திறன் கொண்ட கமராவிற்கு இடமளிப்பதுடன், 300 சதவீதம் அதிகமான அளவிலான துல்லியத்தையும் வழங்குகின்றது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு  குறிப்பிடுகையில்,

“ Huawei மூலமாக அதிசிறந்த ஸ்மார்ட்போன் அனுபவம் மற்றும் வலிமையான ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் அடங்கலாக வியப்பூட்டும் காலகட்டத்திற்குள் நாம் நுழைகின்றோம். இலங்கை மக்களின் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய வகையிலான இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும், புத்தாக்கங்களையும் இங்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்”.

நாட்டிலுள்ள பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்திகளுள் மிகவும் போற்றப்படுகின்ற ஸ்மார்ட்போன்கள் வரிசையில் Huawei P9 Plus உற்பத்தியும் இடம்பிடித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு வியப்பூட்டும் வகையில் இன்னும் அதிகமான உற்பத்திகள் இந்த ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை, தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ர்ரயறநi திட்டமிட்டுள்ளதுடன்ரூபவ் கடந்த ஆண்டிலும் அது ரூடவ்டுஇணையற்ற சாதனை இலக்குகளை அடையப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.3% சந்தைப் பங்கினை Huawei கைப்பற்றியுள்ளதாக GFK இன் புள்ளி விபரங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் இரண்டாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக மாறுவதற்கான இலக்கில் தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. 

Brand Finance இன் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில் உலகிலுள்ள முதல் 100 பெறுமதிமிக்க வர்த்தகநாமங்களுள் Huawei ஆனது 47 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57