இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 


இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ள நபர் 73 வயதுடையவர் எனவும், அவர் காலி - கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.