ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்திற்கு இலக்குவைத்து நடத்தப்பட்ட  தற்கொலை குண்டுத்தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த தாக்குதலானது காபூலில் இருந்து ஜலாலாபாத்திற்கு செல்லும் வீதியில் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர் பயணித்த  பஸ்ஸில் நடத்தப்பட்டுள்ளது. 

கனடா நாட்டு தூதரகத்தில் பணிபுரியும் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர்  பஸ்ஸில் செல்லும் போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.