கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச்செல்லும். உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளையும் சுத்திகரிப்பு செய்யும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கடும் சோதனைகளின் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலங்கை விமானப் படையினர் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.