உல­கத்­தையே நிலை­கு­லையச்  செய்­துள்ள கொவிட் – 19 எனப்­ப­டு­கின்ற கொரோனா வைரஸின் தாக்­கத்­தினால் இது­வ­ரையில் 5ஆயிரம் பேர் வரையில் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஒரு இலட்­சத்து 40ஆயிரம் பேர் கொரோனா தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

சீனாவில் பரவத் தொடங்­கிய இந்த கொரோனா வைர­ஸா­னது இன்று நூற்­றுக்கும் மேற்­பட்ட நாடு­களில் பரவி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  உயிர்­களைக் காவு கொண்­டுள்­ள­துடன் உலக பொரு­ளா­தா­ரத்­தையே உருக்­கு­லைத்­துள்­ளது என்றால் மிகை­யா­காது.

இலங்­கையில் கடந்த 10ஆம் திக­தி­யன்று கொரோனா வைரஸ் தாக்­கத்­துக்­குள்­ளான ஒருவர் இனங்­கா­ணப்­பட்டார். அவர்  ஒரு சுற்­றுலா வழி­காட்­டி­யாகச் செயற்­பட்டு வந்­த­வ­ராவார். இவர் இத்­தா­லியைச் சேர்ந்த சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு வழி­காட்­டி­யாகச் செயற்­பட்­ட­தா­கவும் அவர்கள் ஊடா­கவே இவ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் அவர் குறித்த சுற்­றுலாப் பய­ணி­களை அழைத்­துச்­சென்ற  சகல இடங்­க­ளிலும்  விசா­ர­ணைகள்  மேற்­கொள்­ளப்­பட்­டன. அத­ன­டிப்­ப­டையில் தற்­போது இலங்­கையில் கொரோனா தொற்­றுக்­குள்­ளான 10 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் அவர்கள் அங்­கொடை ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். அதே­போன்று  அவர்­க­ளது குடும்­பத்­தாரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள்.

சுற்­றுலா வழி­காட்டி ஒரு­வ­ருக்கு இந்த கொரோனா வைரஸ்­தொற்று ஏற்­பட்­ட­தா­னது சுற்­றுலாத் துறை­யி­ன­ரி­டையே பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­தோடு அத்­து­றையைச் சவா­லுக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. கடந்த பெப்­ர­வரி மாதம் சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை, வீழ்ச்­சியைப் பதிவு  செய்­தி­ருந்­தது. ஆனால் தற்­போது இலங்­கைக்குள் 10பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்­றி­யுள்­ளதால் சுற்­று­லாத்­துறை மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் இடம்­பெற்ற தொடர் குண்டுத் தாக்­கு­தல்­களால் நாட்டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரமும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.  சுற்­று­லாத்­து­றையும் பாரிய சரிவைச் சந்­தித்­தி­ருந்­தது. அந்த நிலை­யி­லி­ருந்து நாடு படிப்­ப­டி­யாக மீண்டு வந்­து­கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது இந்த வைரஸ் தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சுற்­றுலா ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் சனத் உக்­வத்த கருத்துத் தெரி­விக்­கையில், உண்­மையில் இந்த கொரோனா வைரஸ் பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

சர்­வ­தேச விமான சேவைகள் மற்றும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கும் அவர்கள் இருக்கும் நாட்­டி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்டாம் என அறி­வு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. சுற்­றுலா அட்­ட­வ­ணைகள் மாற்­றப்­பட்­டுள்­ளன. இதனால் எமது ஹோட்­டல்­க­ளுக்­கான முன்­ப­தி­வு­களும்  பாரிய அளவு குறை­வ­டைந்­துள்­ளன. எமக்கு பிர­தா­ன­மான 252 ஹோட்­டல்கள் உள்­ளன. அதற்கு மேல­தி­க­மாக  பதிவு செய்­யப்­ப­டாத சாதா­ரண சுற்­றுலா ஹோட்­டல்கள் 400 வரை காணப்­ப­டு­கின்­றன. எமது இந்த தொழிற்­து­றை­யோடு இலட்­சக்­க­ணக்­கானோர் தொடர்­பு­பட்­டுள்­ளனர். எமது ஹோட்­டல்­க­ளுக்கு பழங்கள், மரக்­க­றிகள், மீன்கள், முட்டை மற்றும் இறைச்சி வகைகள் என பல்­வே­று­பட்ட உண­வுப்­பொ­ருட்கள் வழங்­கு­ப­வர்கள் முதல் பயண வழி­காட்­டிகள் மற்றும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு போக்­குவ­ரத்து வச­தி­களை வழங்கும் தரப்­பினர் வரை­யி­லான பல்­வேறு தரப்­பினர் எம்­மோடு தெர­டர்­பு­பட்­டுள்­ளனர்.

எனவே எமது ஹோட்­டல்­க­ளுக்கு சுற்­றுலாப் பய­ணிகள் வரு­வது  குறை­வ­டைந்ததால் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பல  இலட்சம் பேர் பாதிக்­கப்­ப­டுவர். இது­வொரு பாரிய சவா­லான பிரச்­சி­னை­யாகும். தற்­போது வருகை தந்­துள்ள சுற்­றுலாப் பய­ணிகள் ஹோட்­டல்­களில் இருக்­கின்­றனர். புதி­தாக வரு­வோரின் தொகை பாரிய அளவு குறை­வ­டைந்­துள்­ளது. இதனால்  ஹோட்டல் துறையின் வரு­மானம் பாரிய வீழ்ச்­சி­ய­டையும் நிலை­யேற்­பட்­டுள்­ளது. இதனால் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் வழங்கல் மற்றும் ஹோட்டல் நிர்­வா­கத்தை கொண ்டு நடத்தல்  என்­பன பாரிய சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன.  

இவ்­வா­றா­ன­தொரு பாரிய சவா­லான நிலை­மையை கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர் நாம் எதிர்­கொண்டோம். அந்தச் சம­யத்தில் எமக்கு அர­சாங்­கத்தால் சில நிவா­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டன. கடன் செலுத்­து­வது தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது. குறைந்த வட்­டி­யி­லான கடன் வழங்­கப்­பட்­டது. இவ்­வா­றா­ன நிவா­ர­ணங்கள் ஊடாக எமது தொழிற்று­றையைத் தொட­ர­மு­டிந்­தது. இதே­போன்று எமது இந்த சவா­லான நிலை­மை­யினைக் கருத்­திற்­கொண்டு எமது தொழிற்­று­றையைப் பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உத­வ­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­போன்று இன்னும் ஏரா­ள­மான துறையில் இந்த கொரோனா தாக்கம் செலுத்­தி­யுள்­ளது. அதா­வது இலங்­கைக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலு­கையின் மூல­மாக  இலங்­கைக்கு பல்­வேறு நன்­மைகள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன.  குறிப்­பாக கட­லு­ணவு ஏற்­று­ம­தி­யி­னூ­டாக நாம் பாரிய நன்மை அடைந்து வரு­கின்றோம்.

 குறிப்­பாக கடந்த வருட ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான கட­லு­ணவு ஏற்­று­ம­தியின் மூல­மாக 262.5  மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாக பெறப்­பட்­டது. தற்­போது உல­க­ளா­விய ரீதியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் எமது கட­லு­ணவு ஏற்­று­ம­தியும் பாரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ளது.

ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே நாம் அதி­க­மான கட­லு­ண­வு­களை ஏற்­று­மதி செய்­கின்றோம். அத­ன­டிப்­ப­டையில் எம்­மி­ட­மி­ருந்து அதிக கட­லு­ண­வு­களை பெற்­றுக்­கொள்ளும் நாடு­களின் வரி­சையில் இத்­தாலி பிர­தான இடம் வகிக்­கி­றது. இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் இத்­தாலி கடு­மை­யான பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளது. இதனால் எம்மால் இத்­தா­லிக்கு கட­லு­ணவு ஏற்­று­மதி செய்­ய­மு­டி­யாத ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஐரோப்­பிய நாடுகள் உள்­ளிட்ட அநே­க­மான நாடுகள் கட­லு­ணவு உள்­ளிட்ட மாமிச உண­வு­களை தவிர்த்து வரு­கின்­றன. இது ஒரு புற­மி­ருக்க உல­க­ளா­விய ரீதியில் காணப்­ப­டு­கின்ற சீன மற்றும் ஜப்பான் உண­வ­கங்கள் மூடப்­பட்டு வரு­கின்­றன. இதனால் கட­லு­ணவு நுகர்வு பாரிய அளவு குறை­வ­டைந்­துள்­ள­துடன் அதற்­கான கேள்­வியும் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

உதா­ர­ண­மாக கடந்த மாதம் 16 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட ஒரு கிலோ மீனா­னது கடந்த வாரம் வெறும் 6 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கே ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது ஒரு பாரிய வீழ்ச்­சி­யாகும். இந்த நிலைமை தொட­ரு­மானால்  எமது கட­லு­ணவு ஏற்­று­மதி பாரிய சவாலை எதிர்­கொள்­ள ­வேண்டி ஏற்­படும். அத்­தோடு எமது கடற்றொழி­லா­ளர்­களும் இதனால் பாதிப்­ப­டை­வார்கள்.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் பெரும்­பா­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளையும் ஏனைய இதர பொருட்கள் பல­வற்­றையும் சீனா உள்­ளிட்ட அந்­நிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­கின்ற ஒரு நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­தினால் வெளி­நாட்டு இறக்­கு­ம­திகள்  கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற கப்­பல்­க­ளுக்கும் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால்  கட்­டு­மானத் தொழிற்­று­றையும் பாரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து கட்­டு­மான தொழிற்­று­றையின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி நிசங்க விஜ­ய­ரத்ன தனது கருத்தை  தெரி­விக்­கையில்,

அதா­வது கட்­டு­மானத் துறைக்­கான பல பொருட்கள் சீனாவிலிருந்தே இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. கடந்த பெப்­ர­வ­ரி­யி­லி­ருந்து 18 வகை­யான கட்­டு­மானப் பொருட் கள் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வில்லை. அதா­வது இறக்­கு­ம­திகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் பாரிய சிக்கல் நில­வு­கி­றது.

இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்தைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வந்­தாலும்கூட சீனா­வி­லி­ருந்து குறித்த பொருட்­களை கொண்டு வரு­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்­க­ளாகும். எனவே நாம் மிகுந்த சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ள­துடன் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் கொடுப்­பதுகூட சவா­லாக உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இவ்­வாறு இந்த கொரோனா வைரஸ் தாக்­க­மா­னது நாட்டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்­தையும் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. இதி­லி­ரு­ந்து மீண்டு நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அத்­தோடு இத்­த­ரு­ணத்தில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் பொதுத்­தேர்தல் ஒன்­றையும் நாடு  எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. எனவே இவற்­றை­யெல்லாம் கருத்­திற்­கொண்டு தூர நோக்­குடன் நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தைச் சிந்­தித்து முறை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். மாறாக அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் நாட்டின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­விடும்.

எனவே அர­சாங்கம் என்ற வகையில் பொறுப்­புடன் திட்­டங்­களை வகுத்து செயற்­பட வேண்டும் என்­பதைப் போல நாட்டு மக்­களும் இந்த இக்­கட்­டான நிலை­மை­யினைக் கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தின் அறி­வு­றுத்­தல்­களைக் கடைப்­பி­டித்து பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.

தற்­போது பல்­வேறு வெளி­நாட்டுப் பொருட்கள் இலங்­கைக்கு வரு­வது குறை­வ­டைந்­துள்­ளதால் அவ்­வா­றான பொருட்­க­ளுக்­கான தட்­டுப்­பாடும் நில­வு­கி­றது. அத்­தோடு கொரோனா அச்­சத்தின் கார­ண­மாக பொது­மக்கள் தமக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை அதி­க­மாக கொள்­வ­னவு செய்து சேமித்து வைக்­கின்ற ஒரு நிலை­மையும் தற்­போது காணப்­ப­டு­கி­றது.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் நாட்டின் பல்­வேறு வர்த்­தக நிலை­யங்­களில் அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் பல­வற்­றுக்­கான தட்­டுப்­பாடு நில­வி­யதைக் காண­மு­டிந்­தது. நாட்டில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு எவ்­வித தட்­டுப்­பாடும் இல்லை எனவும் அநா­வ­சி­ய­மாக அச்­ச­ம­டைந்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை கொள்­வ­னவு செய்­வதை தவிர்க்­கு­மாறும் அர­சாங்கம் கோரிக்கை விடுத்­தது. அது­மாத்­தி­ர­மன்றி அவ­சர நிலை­மைகள் ஏற்­பட்டால் அது தொடர்பில் அர­சாங்கம் உரிய அறி­வித்­தலை விடுக்கும் எனவும்  தெரி­வித்­தது.

இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­தினை கட்­டுப்­ப­டுத்தும் முக­மாக நாட்டின் சகல பாகங்­க­ளி­லு­முள்ள திரை­ய­ரங்­கு­க­ளையும் பூங்­காக்­க­ளையும் அதே­போன்று மிரு­கக்­காட்சி சாலை­க­ளையும் இரு வாரங்­க­ளுக்கு மூடு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நேற்று முன்­தினம் முதல் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நேற்று முதல் எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கைக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிற்சர்லாந்து, நெதர் லாந்து, டென்மார்க், சுவீடன், மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விமானங்கள் இலங்கைக்கு வரு வதற்கே தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுல்படுத்தப்பட்ட இந்த திட்டம்  எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலான இருவாரங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கடந்த 14ஆம் திகதி தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் விமானங்களும் இலங்கை வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டமை குறிப்பி டத்தக்கது.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களின் வருகைக்கு தடைவிதிக்கப் பட்டுள்ள நிலையில் 11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் கொன்சி யூலர் சேவைகளும் இன்று முதல் மட்டுப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளது.

அதனடிப்படையில் இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கான தூதரகங்களின் கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

சாதாரண கடலை வியாபாரம் முதல் கடல் கடந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக செயற்பாடுகளும் இன்று பாதிப்படைந்துள்ளன. எமது நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமின்றி உலக பொருளாதாரத் தையே உருக்குலைத்து நிலை குலையச் செய்துள்ளது இந்த கொரோனா.

இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் முகமாகவே அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரு கின்றது. எனவே பொதுமக்களும் இந்த அவசர நிலை மையினைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எம்.நேசமணி