இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்பான Hutch, அண்மையில் இடம்பெற்ற ‘Hutch Champion’s Challenge 2015/16’ விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் அதியுச்ச விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளித்து கௌரவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் அதியுச்ச பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் இந்த விமரிசையான நிகழ்வில் பாராட்டப்பட்டதுடன் Hutchison Asia Telecom நிறுவனத்தின் செயற்திட்ட பணிப்பாளரான ஆன் சென், Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் Hutch Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

நாடெங்கிலுமுள்ள 500 வரையான Hutch விற்பனை ஊழியர்கள் மற்றும் விநியோக பணியாளர்களைக் கொண்ட பாரிய எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் சமுகமளித்திருந்தனர். .

இதன்போது Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா   கருத்துத் தெரிவிக்கையில்,

“குறிப்பாக 3G தரவு அடங்கலாக நிறுவனத்தின் விற்பனைப் பெறுபேறுகள் அண்மைக்காலத்தில் விரைவாக அதிகரித்துள்ளதுடன் இத்துறையில் தொழில்ரீதியான நேர்த்தி மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றை வெளிப்படுத்திய வலிமையான விற்பனை அணியே இதனை முன்னெடுக்க வழிகோலியுள்ளது”.

இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னிலையில் திகழும் ஒரு நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Private) Limited, “Hutch” வர்த்தகநாமத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. 

நாடளாவியரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் தனது சேவைகளை வழங்கிவருகின்ற இந்நிறுவனம் நியாயமான கட்டணங்களில் 3G மொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்கிவருகின்றது.

Hutchison Telecommunications Lanka (Private) Limited நிறுவனம் Global Fortune 500 நிறுவனங்கள் பட்டியலிலுள்ள Hutchison Whampoa Limited (“HWL”) குழுமத்தின் ஒரு அங்கமாகும்.

HWL குழுமத்தின் தொலைதொடர்பாடல் சேவைப் பிரிவு நவீன 3G தொழிற்பாடுகளில் ஒரு முன்னோடியாக உள்ளதுடன் ஐக்கிய இராச்சியம், இத்தாலி, அயர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரியா மற்றும் சுவீடன் உட்பட ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் ஹொங்கொங், மக்காவு, வியட்னாம், இந்தோனேசியா மற்றும் இலங்கை உட்பட ஆசியாவிலும் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன்ரூபவ் அனேகமான நாடுகளில் ‘3’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கிவருகின்றது.