கொரோனா வைரஸ் தொற்று அச்சம் நிலவும் இக்­கா­லத்தில் பொதுப் போக்­கு­வ­ரத்தில் ஈடு­படும் பய­ணிகள் பய­ணத்­தின்­போது சுகா­தார பாது­காப்பு நடை­மு­றை­களை பின்­பற்ற விழிப்­பு­ணர்­வூட்­டப்­பட  வேண்­டு­மென சமூக ஆர்­வ­லர்கள்  கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது தொடர்பில் சமூக ஆர்­வ­லர்கள் குறிப்­பி­டு­வ­தா­வது,

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பஸ்கள் மற்றும் தனியார் வான்­களில் குறுந்­தூர, நெடுந்­தூரப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் பய­ணி­களில் சிலர் பஸ்­க­ளுக்குள் தும்­மும்­போதும், இருமும் போதும் சுகா­தாரப் பாது­காப்பு நடை­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­கா­துள்­ளனர்.

 கொரோனா வைரஸ் தொற்று  அச்சம் நிலவும் இக்­கா­ல­கட்­டத்தில் இவ்­வாறு இக்­கு­றித்த பய­ணிகள் சுகா­தார நடை­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­காது செயற்­ப­டு­வது அவர்கள் அருகில் அமர்ந்து பய­ணிக்கும் பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

கொரோனா வைரஸ் தொற்றின் அறி­கு­றி­களில், இருமல் மற்றும் தடி­மலும் காணப்­ப­டு­வ­தனால் பொதுப்­போக்­கு­வ­ரத்தில் ஈடு­ப­டுப­வர்கள் தும்­மும்­போதும் இருமும் போதும் சுகா­தார நடை­மு­றை­களைப் பின்­பற்­று­வது அவ­சியம். ஆனால், இந்த அவ­சி­யத்தை உண­ராது சில பய­ணிகள் செயற்­ப­டு­கின்­றனர்.

தற்­போ­தைய கொரோனா வைரஸ் தொற்று அச்ச சூழலைக் கருத்­திற்­கொண்டு பொதுப் போக்­கு­வ­ரத்தில் ஈடு­படும் பய­ணிகள் தும்­மும்­போ­தும், இருமும் போதும் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டிய சுகா­தாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் கடைப்பிடிப்பதற்கு விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.