(செ.தேன்­மொழி)

கொரோனாவை அர­சாங்கம் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது. இதனை தடுப்­ப­தற்­காக அர­சாங்­கத்தால் எடுக்­கப்­படும் ஆக்கபூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்க்­கட்சி என்ற வகையில் நாங்கள் முழு ஒத்­து­ழைப்­பையும் பெற்றுக்கொடுப்போம் என்று தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்­ஜூன ரண­துங்க, பொது போக்­கு­வ­ரத்தில் செல்லும் பய­ணிகள் தொடர்பில் அவ­தானம் செலுத்தி அவர்­க­ளுக்­கான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றும் கூறினார்.

 ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில்  வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கொரோனா வைரஸ் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு அர­சாங்கம் அதனை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். தற்­போது வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கிய இரு நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. ஆனால் இந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளான மேலும் சிலர் இருக்­கலாம் என்று நாங்கள் சந்­தே­கிக்­கின்றோம்.

அதே­வேளை இந்த பாரிய நெருக்­க­டியை கருத்­திற்­கொண்டு பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை அளித்­துள்­ள­மையை பாராட்­டு­வ­துடன்    நாம் இன்னும் இந்த வைரஸ் தாக்­கத்தை சாதா­ரண விட­ய­மா­கவே கருதி செயற்­பட்டு வரு­கின்றோம் என்றே எமக்கு தோன்­று­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு குற்­றஞ்­சாட்ட நாங்கள் விரும்­ப­வில்லை. எதிர்க்­கட்சி என்­ற­வ­கையில் இவ்­வா­றான அவ­ச­ர­கால நிலை­மையின்போது அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி செயற்­ப­டவே நாங்கள் விரும்­பு­கின்றோம்.

வைரஸை தடுப்­ப­தற்­காக அர­சாங்­கத்­திற்கு நிதி தேவைப்­படின் அதனை பெற்றுக் கொள்­வ­தற்­கான பல வாய்ப்­புகள் இருக்­கின்­றன. இவ்­வா­றான நிலையில் நாம் அவர்­க­ளுக்கு எமது ஒத்­து­ழைப்­பு­க்களை பெற்றுக்கொடுக்க கட­மைப்­பட்­டுள்ளோம்.விமான நிலை­யத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­தாலும்  இதில் மேலும் விருத்தி ஏற்­ப­டுத்­த­வேண்டும்.

வைரஸின் அவ­தான நிலை­மையை கருத்திற்கொண்டு சில நாடுகள் அவர்­க­ளது நாட்டு விமான சேவையை ரத்து செய்­துள்­ள­துடன் உள்­நாட்­டுக்­குள்ளே சில நக­ரங்­களை முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளன. இதே­வேளை அமெ­ரிக்­காவும்  ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு தடை­வி­தித்­துள்­ளது. இவற்றை கருத்திற்கொண்டு நாமும் எமது விமான சேவை தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும். அது­மாத்­தி­ர­மின்றி பொது­வா­க­னங்கள் தொடர்பில் கட்­டாயம் அவ­தானம் செலுத்த வேண்டும். பஸ் மற்றும் புகை­யி­ரத பய­ணிகள் எவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றார்கள் என்­பது தொடர்பில் சிந்­தித்து பார்ப்­ப­துடன் அவர்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

இலங்­கையில் வெப்­ப­நிலை அதிகம் எனவும் இங்­குள்ள கால­நி­லைக்­க­மைய கொரோனா தொற்று தீவி­ர­மாக பர­வ­ல­டை­யாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை உரிய தரப்­பினர் விளக்­க­மாக தெரி­விக்க வேண்டும். இவ்­வாறு கூறிக் கொண்டு இருப்­பதால் வைரஸைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. வைரஸ் தொற்று தொடர்­பான விட­யங்­களை மறைப்­பதால் அதி­லி­ருந்து தப்பிக்கொள்ள முடி­யாது. அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டாலே அதனைக் கட்­டுப்­ப­டுத்த முடியும்.

எதிர்­வரும் தினங்­களில் சித்­தி­ரைப்­புத்­தாண்டு, உயிர்த்த ஞாயிறு தினம், வெசாக் , பொசன் போன்ற பண்­டிகை தினங்கள் வரு­வதால் இந்த விட­யங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும். மக்கள் தற்­போதே பயத்திலுள்­ளனர். வர்த்­தக நிலை­யங்­களில் உணவுப் பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.பாராளுமன்ற தேர்தலைவிட தற்போது மக்களின் நலனை பாதுகாப்பது முக்கியமான விடயமாகும். இந்த நிலைமையில் பணம் படைத்தவர்கள் தப்பிக்கொண்டாலும்  சாதாரண மக்களே பெரிதும் பாதிப்படைவார்கள். இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.