(நா. தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதால் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரங்கள் ஊடாகத் தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த முடியாத நிலையேற்பட்டிருப்பதுடன், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் தெளிவாக சிந்திக்க முடியாத சூழ்நிலையொன்று ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். 

எனவே பொதுத்தேர்தலை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடுவதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெலவத்தை பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.