(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்துவது  சவால்மிக்கது எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தினால் மாத்திரம் நெருக்கடி நிலையினை எதிர்க் கொள்ள முடியாது ஆகவே மக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலிறுத்தினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்கு மாத்திரமல்ல   சர்வதேசத்தில் பலம் வாய்ந்த  பல  நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக   காணப்படுகின்றது. 

வைரஸ்  பரவலை கட்டுப்படுத்துவது  சலால் மிக்கது.  உலக  சுகாதார தாபனம் விடுத்துள்ள  ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துள்ளது.

கொரானா வைரஸ் தொற்றினை கட்படுத்தும் வேலைத்திட்டத்தில்  அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது. மக்கள்  அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு  முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.