நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று, தேசிய வனவிலங்கு திணைக்களம் தாவரவியல் பூங்கா திணைக்களம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் 2 வார காலம் மூடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததையடுத்து, இன்று அருங்காட்சியகத்  திணைக்களத்திற்குட்பட்ட 11 அருங்காட்சியகங்களை மறுஅறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.