கொரோ­னாவை பயன்­ப­டுத்தி எம்­மீது மீண்டும் இன அழிப்பா ? தமிழர் தாய­கத்­தினை இலக்கு வைப்­பது ஏன்-  சண்.குக­வ­ரதன் கேள்வி

16 Mar, 2020 | 01:55 PM
image

கொரோனா வைரஸ் மருத்­துவ கண்­கா­ணிப்பு நிலை­யங்­களை தமிழர் தாய­கத்­தை மையப்­ப­டுத்தி ஸ்தாபிப்­பதன் ஊடாக மற்­று­மொரு இன அழிப்­பினை செய்­வ­தற்கு அர­சாங்கம் விளை­கின்­றதா என்று மேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சண்.குக­வ­ரதன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கொரோனா வைரஸின் தாக்­கத்­தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இனம், மதம், மொழி கடந்து அனைத்து தரப்­பி­னரும் ஒன்­று­பட வேண்­டிய கடப்­பாட்டில் இருக்­கின்றோம் என்­பது மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்­காக மருத்­துவ கண்­கா­ணிப்பு நிலை­யங்கள் மட்­டக்­க­ளப்­பிலும் வவு­னி­யாவில் பம்­பை ம­டு­விலும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன.  இந்த கண்­கா­ணிப்பு நிலை­யங்­க­ளுக்கு வெளி­நா­டு­களில் இருந்து வரு­கின்­ற­வர்கள் விமான நிலையத்­தி­லி­ருந்து நேர­டி­யா­கவே அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். இதனால் பொது­மக்கள் அச்­சத்­துக்குள்­ளா­கி­யுள்­ள­தோடு, தமது கடு­மை­யான எதிர்ப்­பு­க­ளையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர்.  கடந்த ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை அடுத்து, பாகிஸ்தான் பிர­ஜைகள் உட்­பட மற்றும் சில­நா­டு­களின் பிர­ஜை­களை உள்­ள­டக்­கிய குழு­வி­னரை அர­சாங்கம் உட­ன­டி­யாக வவு­னி­யா­வுக்கே அனுப்­பி­யி­ருந்­தது.

இவ்­வாறு ஆட்­சி­யா­ளர்கள் ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் உட­னடி தீர்­வு­களை அடை­வ­தற்­காக தமிழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­னையே முதற்­தெ­ரி­வாக எடுத்துக் கொள்­கின்­றனர்.

பொது­மக்கள் எதிர்ப்­பினைக் காட்­டு­கின்­ற­போதும் அந்­த­ நி­லைப்­பா­டுகள் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது எதேச்­ச­தி­கா­ர­மாக முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­கின்­ற­மை­யா­னது தமிழர் தயா­கத்தின் பகு­திகள் திட்­ட­மிட்டு இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வியை ஏற்­ப­டுத்­து­கின்­றது. மேலும் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­களை தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு தற்­போது செயற்­பாட்டில் இல்­லாத மத்­தள விமான நிலை­யத்­தி­னையும் அதனை அண்­மித்த பகு­தி­யொன்றில் கண்­கா­ணிப்பு மையத்­தி­னையும் அமைப்­ப­தற்­கான ஏது­வான நிலை­மைகள் இருக்­கின்­ற­போதும் அதனை கருத்­தி­லெ­டுக்­காது அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­ற­மை­யா­னது தொற்று நோயின் தாக்கம் தமிழர் தாய­கத்தில் வலுப்­பெற்று மீண்­டு­மொ­ரு ­த­டவை இன அழிப்­பை மேற்­கொள்­வ­தற்­கான திரை­ம­றைவு முயற்­சியா என்ற சந்­தே­கங்கள் வலு­வாக எழு­கின்­றன.

இவ்­வா­றான முகாம்­களை அம்­பாந்­தோட்­டை­யிலோ காலி­யிலோ அமைப்­ப­தற்கு இந்த அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்? இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரான் நாட்டிலிருந்து வரும் பய­ணி­களை பரி­சோ­திப்­ப­தற்கு தடுப்பு முகாம் தேவை­யெனில், அந்த நாடுகளிலிருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது எதற்காக வடக்கு, கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்புக்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத்தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59