(செ.தேன்­மொழி)

சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­களை தொற்­று ­நீக்க கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும். இது தொடர்பில் அக்­க­றை­யின்றி இருப்­பதால் நாட்டு மக்­களே பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கு­வார்கள் என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

கொரோனா வைரஸ் பர­வ­லினால் ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் நிலை­மை­களை கருத்திற் கொண்டு பெரு­ம­ளவு மக்கள் கலந்து­கொள்ளும் கூட்­டங்­க­ளுக்கு அரசாங்கம் தடை விதித்­துள்­ள­துடன், இவ்­வா­றான நிகழ்­வுகள் தொடர்பில் பொலி­ஸா­ரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச் செய­லா­ள­ரிடம்  வின­வி­ய­போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,

உல­க­ளா­விய ரீதியில் பர­வி­வரும் கொரோனா வைரஸின் கார­ண­மாக பெரும் அச்­சு­றுத்தல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. வைரஸ் பர­வலை தடுப்­பது தொடர்பில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். வைரஸ் கார­ண­மாக பெரும் தொகை­யா­னோரை ஒன்­று­கூட வேண்டாம் என்று அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. இதனால் இந்த விடயம் தொடர்பில் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

கொரோனா அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மையை கருத்திற் கொண்டு எமது தேர்தல் பிர­சா­ரங்­க­ளையும் அதற்­கான மக்­களின் பங்­கு­பற்­ற­லையும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே மேற்­கொள்ள எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம்.

வேட்­பு­மனுத் தாக்­கலின் பின்­னரே எமது தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க இருப்­ப­துடன், இதன்­போது குறிப்­பிட்­ட­ளவில் மாத்­தி­ரமே பிர­சா­ரங்­களை நடத்த எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். எமது கட்­சியின் வேட்­பாளர் பெயர்ப்­பட்­டி­யலும் தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் மக்கள் அனை­வ­ரையும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகா­தாரப் பிரி­வினால்  வழங்­கப்­படும் அறி­வு­றுத்­தல்­க­ளுக்­க­மைய செயற்­ப­டு­மாறும் கேட்டுக் கொள்­கின்றோம்.

இதே­வேளை, கொரோனா வைரஸ் தீவிர­மாக பர­வி­வரும் நாடு­க­ளான இத்­தாலி, தென்­கொ­ரியா மற்றும் ஈரான் ஆகிய நாடு­களிலிருந்து வரும் பய­ணிகள் மாத்­தி­ரமே தற்­போது தொற்­று­நீக்க கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அனுப்­பப்­ப­டு­கின்­றனர். சீனா­வி­லி­ருந்து வரும் நபர்­களை கண்காணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தில்லை என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இதி­லுள்ள நெருக்­கடி நிலை­மை­களை அரசாங்கம் கவனத்திற்  கொள்ள வேண்டும். சீனாவில் வைரஸ் பரவும் அளவு குறைவடைந்திருந்தாலும்  இன்னும் வைரஸ் பரவிதான் வருகின்றது. இதனால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கவனம் செலுத்தாத பட்சத்தில் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.