ஒரு பராமரிப்பு இல்லத்தில் 19 அங்கவீனமடைந்தவர்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக 30 வயதுடைய ஜப்பானிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது ஜப்பானில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் மேற்கில் இருக்கும் சாகமிஹாரா நகரத்தில் உள்ள மாற்று திறனாளிகள் இல்லத்தில் நுழைந்த ஒருவர், கத்தியால் தாக்குதல் நடத்தி குறைந்தது 19 பேரை கொலை செய்தார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

குறித்த இல்லத்தில் வேலை செய்யும் ஒருவரே, தானே முன்வந்து பொலிஸாரிடம் குற்றத்தை ஒப்பு கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் யோகோகாமா மாவட்ட நீதிமன்றம் இன்று அவரை தூக்கிலிட்டு கொலை செய்ய உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளி எந்த மேல் முறையீடுகளையும் செய்ய முன் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.